பள்ளிபாளையம் FL2 மதுபான கடையால் இடையூறு ஏற்பட்டால் கடையை மூடிட உயர்நீதி மன்றம் உத்தரவு

பள்ளிபாளையம் சங்ககிரி சாலையில் செயல்படும் உயர்ரக மதுபான கடையால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டால் கடையை மூடிட வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் சங்ககிரி சாலையில் உயர்ரக FL2 உயர் ரக மதுபான கடை கடந்த சில மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. குடியிருப்புகள், மருத்துவமனைகள், அரசு பள்ளிகள் அதிகம் உள்ள இந்த பகுதியில் இந்த மதுபான கடை திறக்கப்பட்டுள்ளது. மேலும் பிரதான சாலையின் அருகிலே கடை உள்ளதால் விபத்துக்கள் அதிகளவு ஏற்பட்டு வருவதால் ,இந்த கடையை உடனடியாக மூட வேண்டும் என வலியுறுத்தி, பள்ளிபாளையத்தை சேர்ந்த வழக்கறிஞர் மகாலிங்கம் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். இதில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அவர்கள் வெளியிட்டுள்ள தீர்ப்பில், பள்ளிபாளையத்தில் செயல்படும் தனியார் மதுபான கடையை இரண்டு மாதங்களுக்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் கலால் மாவட்ட அதிகாரி ஆகியோர் ஆய்வு செய்து, விதிமுறைகளை மீறி மதுபான கடை செயல்பட்டால் அதை மூடிட வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.நீதிமன்றத்தின் இந்த உத்தரவு பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்துள்ளது. சமூக ஆர்வலர் மகாலிங்கத்தை பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
Next Story