தெற்கு ரயில்வே GMக்கு நாமக்கல் MP கோழிப்பண்ணையாளர்கள் நலன் கருதி அவசர கடிதம் !

தெற்கு ரயில்வே GMக்கு நாமக்கல் MP கோழிப்பண்ணையாளர்கள் நலன் கருதி அவசர கடிதம் !
நாமக்கல் ரயில் நிலையத்தில் உள்ள சரக்கு கொட்டகையை ஒசூர் கூட்ஸ் ஷெட் போல் 12 மணி நேரம் வேலை செய்யும் கொட்டகையாக மாற்றி, எனது தொகுதியில் முன்னிலை வகிக்கும் கோழிப்பண்ணை தொழிலுக்கு உதவ வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
நாமக்கல் பகுதியின் பிரதான தொழிலான கோழிப்பண்ணை தொழிலை மேம்படுத்தும் உன்னத நோக்கில் இரயில்வே கூட்ஸ் 24 மணி நேரமாக உள்ளதை 12 மணி‌நேரமாக மாற்ற சதர்ன் இரயில்வே GM RN.சிங் அவர்களுக்கு கடிதம் நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் எம்பி கடிதம் அனுப்பியுள்ளார். நாமக்கல் மாவட்டத்தின் பிரதான தொழிலான கோழிப் பண்ணை தொழிலை மேம்படுத்தும் உன்னத நோக்கில்,கோழிப்பண்ணையாளர்கள் வேண்டுகோளை ஏற்று இரயில்வே கூட்ஸ் ஷெட் 24 மணி நேர துப்புரவு பிரிவின் கீழ் வருவதை 12 மணி நேரம் வேலை செய்யும் கொட்டகையாக மாற்ற இரயில்வே GM R.N.சிங் அவர்களுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது அதில் கூறப்பட்டுள்ளதாவது... தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் மற்றும் முட்டை கோழி பண்ணையாளர்கள் சந்தைப்படுத்துதல் சங்கத்திடம் இருந்து, நாமக்கல் ரயில் நிலையத்தில் உள்ள சரக்கு கொட்டகையின் செயல்பாடு குறித்து கோரிக்கையை முன் வைத்தனர். தற்போது நாமக்கல் சரக்கு கொட்டகை 24 மணி நேர துப்புரவு பிரிவின் கீழ் வருவதால் கோழிப்பண்ணை சங்கத்தினர் சரக்குகளை இறக்குவதில் மிகுத்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். வழக்கம் போல் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தொழிலாளர்கள் வழக்கம் போல் வேலை செய்கிறார்கள். மேலும், சரக்குகள் சுமூகமாக செல்ல சரியான வெளிச்சம் மற்றும் சாலை வசதிகள் இல்லை. இவை வணிகப் பொருட்கள் அல்ல. பீகார், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கோழித் தீவனங்களுக்கான மூலப்பொருட்கள். இதில், நாமக்கல் சரக்கு கொட்டகையை ஒசூர் கூட்ஸ் ஷெட் போல் 12 மணி நேரம் வேலை செய்யும் கொட்டகையாக மாற்றி, எனது தொகுதியில் முன்னிலை வகிக்கும் கோழிப்பண்ணை தொழிலுக்கு உதவ வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். விரைவில் மத்திய இரயில்வே அமைச்சரையும் இக் கோரிக்கை சம்மந்தமாக சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Next Story