நட்றம்பள்ளியில் தேர்தல் பணிக்குழு உறுப்பினர் சேர்க்கை படிவத்தை வழங்கிய MP

தேர்தல் பணிக்குழு உறுப்பினர் சேர்க்கை படிவத்தை வழங்கிய MP
திருப்பத்தூர் மாவட்டம் தேர்தல் பணிக்குழு உறுப்பினர் சேர்க்கை படிவத்தை வழங்கிய MP திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நகர, ஒன்றிய, பேரூர் கழக செயலாளர்கள் மற்றும் தேர்தல் பணிக்குழு ஒருங்கிணைப்பாளர்களிடம் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கைக்கான படிவங்களை திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி என் அண்ணாதுரை மற்றும் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் வழங்கி சிறப்புரை ஆற்றினார் இந்த நிகழ்ச்சியில் நாட்றம்பள்ளி மேற்கு ஒன்றிய செயலாளர், மாவட்ட ஊராட்சி குழு தலைவரும் மற்றும் திட்ட குழு தலைவருமான சூரியகுமார் வழங்கினார்கள். இந்நிகழ்வில் ஜோலார்பேட்டை நகர செயலாளர் அன்பழகன் ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் சதிஷ்குமார், ஜோலார்பேட்டை மத்திய ஒன்றிய செயலாளர் கவிதாதண்டபாணி, ஜோலார்பேட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் உமா கண்ரங்கம், கந்திலி தெற்கு ஒன்றிய செயலாளர் டி.அசோக்குமார், திருப்பத்தூர் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் சுரேஷ்குமார், நாட்றம்பள்ளி பேரூர் செயலாளர் எஸ்.உமாசந்திரன், பொதுக்குழு உறுப்பினர் சத்தியநாராயணன், நாட்றம்பள்ளி ஒன்றிய குழுத் தலைவர் வெண்மதி சிங்காரவேலன், நாட்றம்பள்ளி பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர் கீர்த்திராஜன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் அருள்நிதி மற்றும் தேர்தல் பணிக்குழு உறுப்பினர்கள் உடன் இருந்தார்கள்.
Next Story