அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் பட்டியலில் இரட்டை பதிவு வாக்காளர்களின் பெயர்களை நீக்க வேண்டும்- MRV.

அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் பட்டியலில் இரட்டை பதிவு வாக்காளர்களின் பெயர்களை நீக்க வேண்டும்- MRV.
அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் பட்டியலில் இரட்டை பதிவு வாக்காளர்களின் பெயர்களை நீக்க வேண்டும் MRV. கரூர் மாவட்ட அதிமுக செயலாளர் முன்னாள் அமைச்சர்ருமான எம் ஆர் விஜயபாஸ்கர் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை கடிதம் அனுப்பி உள்ளார். அதில் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் இறப்பு இரட்டை பதிவு வாக்காளர் உடைய பெயர்களை முழுமையாக நீக்கம் செய்ய வேண்டிய விவரங்களை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மாவட்ட ஆட்சியர் கரூர் வருவாய் கோட்டாட்சியர் என அனைவரிடமும் ஏற்கனவே கடிதம் மூலம் வழங்கியுள்ளோம் இருப்பினும் கடந்த ஆறு ஒன்று 2025 அன்று வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் முழுமையாக நீக்கம் செய்யப்படாமல் அவர்களது பெயர் வாக்காளர் பட்டியல் தொடர்ச்சியாக இடம்பெற்றுள்ளது. இறந்த வாக்காளர்களின் எண்ணிக்கை 577, இரட்டை பதிவு வாக்காளர்கள் 32, முகவரி தெரியாத வாக்காளர்கள் 5063 என்ற விவரங்களை சேகரித்து அனுப்பியும் மேலே கண்ட பட்டியலில் 4420 பேர் நபர்களின் பெயர்களை நீக்கப்படாமல் உள்ளது. எனவே அதிகாரிகள் கள ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் என மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய கடிதத்தில் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Next Story