வரைவு வாக்காளர் பட்டியலில் குளறுபடி-சீர் செய்ய தேர்தல் அலுவலரான மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்த MRV.

வரைவு வாக்காளர் பட்டியலில் குளறுபடி-சீர் செய்ய தேர்தல் அலுவலரான மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்த MRV.
வரைவு வாக்காளர் பட்டியலில் குளறுபடி-சீர் செய்ய தேர்தல் அலுவலரான மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்த MRV. கரூர் தான்தோன்றி மலையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தங்கவேலுவை நேற்று மாலை சந்தித்தார் முன்னாள் அமைச்சரும் அதிமுக கரூர் மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர். அப்போது கரூர் சட்டமன்றத் தொகுதியில் படிவம் 9, 10 மற்றும் 11-ன் சுருக்கப் பட்டியல்களில் முழுமையற்ற தரவுகள் உள்ளது என எம்.ஆர். விஜயபாஸ்கர் புகார் மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எம்.ஆர். விஜயபாஸ்கர் தேர்தல் ஆணையம் சிறப்பு வாக்காளர் திருத்தம் எஸ் சி ஆர் பணிகள் மேற்கொண்டு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டது. அந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளிவந்த பிறகு 01.01.2026 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் முகவரி மாற்றம் படிவம் 6, 7, 8 வழங்க தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இதில் கொடுத்த படிவங்களை அந்தந்த அரசியல் கட்சியைச் சார்ந்த பிஎல்ஏ 2 பொறுப்பாளர்கள் தொடர்பான பட்டியல் கேட்கப்பட்டது. முகவரி மட்டும் அதில் பதிவிடப்பட்டிருந்தது ஆனால் அவர்களுடைய செல்போன் எண்கள், எந்த பாகம் என்ற எண் இல்லை. இதை கண்டுபிடிப்பதற்கு பெரிதும் சிரமமாக உள்ளது. நான்கு தொகுதியில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் வருகின்றார்கள். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளோம். இந்திய தேர்தல் ஆணையம், சென்னை தலைமை தேர்தல் ஆணையத்திற்கும் புகார் அளித்துள்ளோம். மாவட்ட ஆட்சியரிடம் பாகம் எண் மற்றும் செல்போன் எண்கள் இல்லை எனவும், வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளார்களா, சேர்க்கப்பட்டுள்ளார்களா என்பது முக்கியமான பிரச்சினை வேறு தொகுதி மற்றும் வேறு மாவட்டத்தில் வீடு உள்ளது. அவர்கள் இங்கு குடியிருப்பது போன்ற முகவரி மாற்றம் செய்யப்பட்ட நபர்களை சேர்ப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார். மேலும்,கரூரில் குடியிருந்தவர்கள் 10 வருடத்திற்கு முன்பாக சேலத்திற்கு சென்று விட்ட நிலையில் அவர்களின் ஓட்டை நீக்காமல் திமுகவினர் அதிகாரிகளை மிரட்டியதால் இன்னும் அப்படியே ஓட்டு உள்ளது தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் 30 தேதி வரை நீட்டித்துள்ளனர்.புகார் கொடுப்பதற்கு கடைசி தேதி 30.1.2026 வரை மாவட்ட ஆட்சியர் கூறுகிறார்.ஆனால் 30-ஆம் தேதி பத்து ஓட்டுகளை சேர்க்க முயற்சித்தால் கண்டுபிடித்து புகார் கொடுப்பது எப்படி என கேள்வி எழுப்பினர். இறுதி வாக்காளர் பட்டியல் தேதி 17.2.2026 சேர்த்தல் இறந்தவர்களை நீக்குதல் உள்ளிட்டவைகள் வெளிவரும் என தெரிவித்தனர். ஆனால் அதற்கு முன்பாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளிவருமா? என கேள்வி எழுப்பிய நிலையில் ஒரு அதிகாரி நேரம் இருந்தால் வரும் இல்லையென்றால் வராது என மற்றொரு அதிகாரி தெரிவித்ததாகவும், இறுதி வாக்காளர் பட்டியல் வரும் பட்சத்தில் ஆளும் திமுக கட்சியைச் சார்ந்தவர்கள் வாக்காளர்களை சேர்த்தால் எப்படி கண்டுபிடிப்பது. படிவம் 6-ல் முகவரி மட்டுமே உள்ளது. அவர்களின் பாகம் எண் மற்றும் செல்போன் எண்கள் இல்லை என குற்றச்சாட்டு தெரிவித்தார்.
Next Story