கரூர்-விண்வெளி(NASA) ஆய்வு திட்ட மாதிரி செயல்முறை துவக்க விழா ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளியில் நடைபெற்றது.

கரூர்-விண்வெளி(NASA) ஆய்வு திட்ட மாதிரி செயல்முறை துவக்க விழா ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளியில் நடைபெற்றது.
கரூர் விண்வெளி(NASA) ஆய்வு திட்ட மாதிரி செயல்முறை துவக்க விழா ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளியில் நடைபெற்றது. கரூர் - சேலம் பை-பாஸ் சாலையில் உள்ள திருக்காம்புலியூரில் செயல்படும் ஶ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளியில் பயின்று வரும் மாணவர்களுக்கு விண்வெளித் திட்டம் சார்ந்த உபகரணங்கள் (NASA KIT ) வழங்கும் விழா நேற்று பள்ளி வளாகத்தில் நடைபபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கரூர் மாவட்டம் புலியூரில் செயல்படும் செட்டிநாடு பொறியில் கல்லூரி இயற்பியல் துறை இணைப் பேராசிரியர் சகாய தினேஷ் பாபு கலந்து கொன்டு 140- மாணாக்கர்களுக்கு NASA KIT என்றழைக்கப்படும் விண்வெளித்திட்டம் சார்ந்த உபகரணங்களை வழங்கி சிறப்புரையாற்றி மணவர்களை ஊக்கப்படுத்தினார். மேலும், விண்வெளிப் பயணம், விண்வெளித் திட்டங்கள் மற்றும் விண்வெளித்துறையில் இந்தியாவின் பங்களிப்பு ஆகியன குறித்து சிறப்புற எடுத்து விளக்கினார். இந்த வருடம் 140 கரூர் சைதன்யா பள்ளி மாணவர்கள் தங்களுடைய திட்ட மாதிரிகளை (NSS) Nasa Settlement (Project) சமர்பிக்க உள்ளனர். இந்த விழாவில் பள்ளி முதல்வர் மற்றும் அனைத்து ஒருங்கிணைப்பாளர்களும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
Next Story