ஸ்லீப்பர் புதுப்பித்தல்’ பணிகள் நடைபெறுவதால் ரயில் சேவைகளில் மாற்றம் -PRO

ஸ்லீப்பர் புதுப்பித்தல்’ பணிகள் நடைபெறுவதால் ரயில் சேவைகளில் மாற்றம் -PRO
ஸ்லீப்பர் புதுப்பித்தல்’ பணிகள் நடைபெறுவதால் ரயில் சேவைகளில் மாற்றம் -PRO உத்துகுளி ​​– திருப்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே ‘ஸ்லீப்பர் புதுப்பித்தல்’ பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்தப் பணிகளுக்கு வசதியாக, சில ரயில் சேவைகளில் கீழ்க்கண்டவாறு மாற்றங்கள் செய்யப்பட உள்ளன என கரூர் மாவட்டம் உள்ளடக்கிய சேலம் ரயில்வே கோட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மரியா மைக்கேல் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவித்துள்ள செய்தி குறிப்பில், திருச்சிராப்பள்ளி சந்திப்பில் இருந்து 13.00 மணிக்கு புறப்படும் ரயில் எண்.16843 திருச்சிராப்பள்ளி – பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ் ரயில், 2026 ஆம் ஆண்டு ஜனவரி 23, 25 மற்றும் 27 ஆகிய தேதிகளில் உத்துகுளி ​​ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும். புதுப்பித்தல் பணிகள் முடிந்த பிறகு, அந்த ரயில் உத்துகுளியில் இருந்து பாலக்காடு டவுன் வரை, ரயில் எண்.16843 திருச்சிராப்பள்ளி – பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ் ரயிலின் அதே நிறுத்தங்களுடன், முன்பதிவற்ற சிறப்பு ரயிலாக இயக்கப்படும் என அந்த செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Next Story