திண்டுக்கல் அமைச்சர் தொகுதியில் SIR-ல் இறந்தவர்களின் பெயர்கள் மீண்டும் இடம்பெற்றுள்ளதால் உறவினர்கள் அதிர்ச்சி

X
Dindigul King 24x7 |25 Dec 2025 7:38 PM ISTDindigul
திண்டுக்கல், ஆத்தூர் சட்டமன்ற தொகுதி அகரம் பேரூராட்சி பாப்பனம்பட்டியில் வசித்து வந்த கிருஷ்ணசாமி நாயுடுவின் மனைவி பத்மாவதி(88) என்பவர் 9 மாதங்களுக்கு முன்பு இறந்த நிலையில் மற்றும் ஆண்டிவேல் மகன் பிச்சைமணி(57) என்பவர் 4.1/2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த நிலையிலும் மேலும் அழகுமலை மனைவி சர்மிளா(26) என்பவருக்கு இரட்டை பதிவு மீண்டும் இடம்பெற்றுள்ளது. SIR-ல் மீண்டும் இறந்தவர்களின் பெயர்களும் இரட்டை பதிவுகளும் இடம் பெற்றுள்ளதால் தேர்தல் ஆணையம் SIR- திருத்தத்தை மீண்டும் கள ஆய்வு செய்து விட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்
Next Story
