கோவை: Springboard Maker Lab on Wheels Initiative நிகழ்வு !

X

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் Infosys நிறுவனத்தார் இணைந்து Springboard Maker Lab on Wheels Initiative நிகழ்வை கோயம்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் நடத்தப்பட்டது.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் Infosys நிறுவனத்தார் இணைந்து Springboard Maker Lab on Wheels Initiative நிகழ்வை கோயம்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் நேற்று நடத்தினர். இந்த நிகழ்வை அசோகபுரம் மேல்நிலைப்பள்ளியில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திக்குமார் பாடி தொடங்கி வைத்தார். Infosys நிறுவனத்தார் மாணவர்களுக்குப் பயிற்சி அளித்தனர். மாதிரி மேல்நிலைப்பள்ளி- அசோகபுரம்,அரசு மேல்நிலைப்பள்ளி- ஒத்தக்கால்மண்டபம் அரசு மேல்நிலைப்பள்ளி- மேட்டுப்பாளையம், மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி- வேட்டைக்காரன்புதூர், ஆகிய பள்ளிகளில் இந்த நிகழ்வுகள் நடைபெற்றது. இந்தத் துவக்க விழாவில் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டார வள மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Next Story