பாஜக மூத்த தலைவரும் மத்திய சட்டத்துறை அமைச்சருமான அர்ஜுன் ராம் மேக்வாலுடன் TN ASMD யின் தந்தை பேராயர் டாக்டர் ஜெயசிங் சந்திப்பு. கிறிஸ்தவர்களுக்கான பாதுகாப்ப பேச்சு வார்த்தை:

பாஜக மூத்த தலைவரும் மத்திய சட்டத்துறை அமைச்சருமான அர்ஜுன் ராம் மேக்வாலுடன் TN ASMD யின் தந்தை பேராயர் டாக்டர் ஜெயசிங் சந்திப்பு. கிறிஸ்தவர்களுக்கான பாதுகாப்ப பேச்சு வார்த்தை:
X
BJP
பாஜக மூத்த தலைவரும் மத்திய சட்டத்துறை அமைச்சருமான அர்ஜுன் ராம் மேக்வாலுடன் தமிழ்நாடு ASMD யின் தந்தை பேராயர் டாக்டர் ஜெயசிங் சந்திப்பு. கிறிஸ்தவர்களுக்கான பாதுகாப்பை குறித்து கலந்துரையாடல். பாஜகவின் மூத்த தலைவரும், தமிழ்நாடு பாண்டிச்சேரி ஆகியவைகளின் தேர்தல் பொறுப்பாளருமான, சட்டத்துறை மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வாலுடன் தமிழ்நாடு ASMD யின் தந்தை பேராயர் டாக்டர் ஜெயசிங் இன்று டெல்லியில் உள்ள அவருடைய இல்லத்தில் சந்தித்து பேசினார். இதுகுறித்து எழும்பி பிரகாசி மிஷனரி பேராயத்தின் நிறுவனரும் தந்தை பேராயுருமான டாக்டர் ஜெயசிங் கூறும் போது, இந்தியாவில் தற்பொழுது கிறிஸ்தவர்கள் ஆங்காங்கே துன்புறுத்தப்படுகிற பதட்டமான சூழ்நிலைகள் நிலவி வருகிறது, பொதுமக்களின் நலனுக்காக மத்தியில் ஆட்சி செய்யும் மத்திய அரசு இதில் கவனம் எடுத்து கிறிஸ்தவர்களையும் கிறிஸ்தவர்களின் ஊழியங்களையும் அவர்களுடைய சபைகளில் சென்று துன்புறுத்தும் காரியங்களை செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், இனி இந்துத்துவா என்ற போர்வையில் கிறிஸ்தவர்களை துன்புறுத்த கூடாது என்று கோரிக்கை வைத்தார், மேலும் மத்திய அரசும் மாநில அரசும் கிறிஸ்தவர்களுக்கு பாதுகாப்பை கொடுத்து, தேவையான நலத்திட்டங்களையும் பாதுகாப்பையும் தமிழ்நாட்டில் உறுதிப்படுத்த வேண்டும் என்றும், தமிழ்நாட்டில் கிறிஸ்தவ போதக நல வாரியம் அமைப்பதற்கும் உறுதியளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதனை ஏற்றுக் கொண்ட மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் , அதற்கு உண்டான பாதுகாப்பை கொடுப்பதாக தமிழ்நாடு ASMD யின் தந்தை பேராயர் டாக்டர் ஜெயசிங்கிடம் தெரிவித்ததாக கூறினார். இந்த சந்திப்பின்போது மத்திய அமைச்சவுடன் டெல்லி முக்கிய அதிகாரிகள் பலர் உடன் இருந்தது. குறிப்பிடத்தக்கது. நாகை செய்தியாளர் ஜீ.சக்கரவர்த்தி
Next Story