கோவை: UGC யின் புதிய வழிகாட்டுதலை கண்டித்து போராட்டம் !
Coimbatore King 24x7 |11 Jan 2025 4:19 AM GMT
UGC- யின் புதிய வழிகாட்டுதலை கண்டித்தும், துணைவேந்தர் தேடுதல் குழுவை ஆளுநரே நியமிக்கும் யுஜிசியின் அறிவிப்பை திரும்ப பெற வலியுறுத்தி கோவை அரசு கலைக் கல்லூரி முன்பு இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்கலைக் கழகத் துணை வேந்தர் தேடுதல் குழுவை மாநில ஆளுநரே அமைக்கலாம் என்று பல்கலைக் கழக மானியக் குழு (யுஜிசி) அறிவித்து உள்ளது. இதற்கு தி.மு.க உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் பல்வேறு அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.இந்நிலையில் பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர் தேடுதல் குழுவை ஆளுநரே நியமிப்பார் என்ற UGC யின் புதிய வழிகாட்டுதலை கண்டித்தும், துணைவேந்தர் தேடுதல் குழுவை ஆளுநரே நியமிக்கும் யுஜிசியின் அறிவிப்பை திரும்ப பெற வலியுறுத்தி கோவை அரசு கலைக் கல்லூரி முன்பு நேற்று இந்திய மாணவர் சங்கத்தினர் UGC நகல் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் நோக்கங்களை விளக்கி முன்னாள் மாநில செயற்குழு உறுப்பினர் உரையாற்றினார். மேலும் இதில் மாணவர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்
Next Story