10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
X
சிவகங்கையில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் சேகர் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கிருஸ்ணக்குமார் முன்னிலை வகித்தார். மாநில துணைத் தலைவர் தமிழரசன் சிறப்புரை ஆற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ராதா கிருஷ்ணனும் விழாவில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். இதில் வருவாய்த்துறை அலுவலர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். விவசாயிகளின் தகவல் பதிவேற்ற பணியை உள்வட்ட வருவாய் ஆய்வாளர்களுக்கு மாற்றமாக, தொடர்புடைய அலுவலர்களிடமே ஒப்படைத்தல் வேண்டும். மூன்று ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
Next Story