100 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு மிளகாய் நாற்றுக்கள்
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், தோட்டக்கலைத் துறை சார்பில் விவசாயிகளுக்கு கத்தரி, மிளகாய் உட்பட பல்வேறு வகையான குழி தட்டு காய்கறி நாற்றுக்கள் 100 சதவீத மானியத்தில் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், நேற்று திருமருகல் உதவி தோட்டக்கலை அலுவலர் செல்லப்பாண்டியன் விவசாயிகளுக்கு மானியத்தில் மிளகாய் நாற்றுகளை வழங்கினார். இது குறித்து, உதவி தோட்டக்கலை அலுவலர் கூறியதாவது விவசாயிகளுக்கு தை பட்டத்திற்காக, தங்கு தடையின்றி காய்கறி நாற்றுக்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை ஏக்கருக்கு 400 எண்ணிக்கையில் மிளகாய் நாற்றுகள் விநியோகம் செய்யப்பட்டு உள்ளது. இதேபோல், வாழை, கத்தரி போன்ற நாற்றுகளும் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் தங்களுக்கு தேவையான கத்தரி, மிளகாய் உள்ளிட்ட காய்கறி நாற்றுக்களை, அந்தந்த வட்டார உதவி தோட்டக்கலை அலுவலர் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.
Next Story



