100 ஆண்டுகளுக்குப் பிறகு நாமக்கல்லில் தெப்பத்தேர் திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்.

X

நாமக்கல் கமலாயக்குளத்தில் நடைபெற்ற தெப்பத்தேர் திருவிழாவை அமைச்சர் மதிவேந்தன் துவக்கி வைத்தார். அருகில் கலெக்டர் உமா, எம்.பிக்கள் ராஜேஷ்குமார், மாதேஸ்வரன், எம்எல்ஏ ராமலிங்கம் ஆகியோர் துவக்கி வைத்தனர். (அடுத்த படம்) குளத்தில் ஆடி அசைந்து சென்ற தெப்பத்தேர்.
நாமக்கல்,நாமக்கல்லில் 100 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற தெப்பத்தேர் திருவிழாவில் ஆயிரக்கணக்கான கலந்துகொண்டு செய்தனர். பக்தர்கள் சுவாமி தரிசனம் நாமக்கல் மாநகரில், மூர்த்தி தலம் என்ற சிறப்புகளோடு, புராதன சிறப்பு மிக்க மலைக் கோட்டையை ஒட்டி, குடவரைக் கோயிலாக, நாமகிரி தாயார் உடனுறை நரசிம்ம சுவாமி, அரங்கநாயகி தாயார் உடனுறை அரங்கநாதர் மற்றும் ஆஞ்சநேயர் ஆகிய திருக்கோயில்கள் அமைந்துள்ளன. அருள்மிகு ஆஞ்சநேயர் சுவாமி, அருள்மிகு நாமகிரி தாயாரை முதலில் கண்ட இடமாக கமலாலயக் குளம் திகழ்வதாக புராண தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரே கல்லினால் உருவான மலையை ஒட்டிஅமைந்துள்ள கமலாலயக் குளத்தில் கடந்த 100 ஆண்டுகளாக தெப்பத் திருவிழா நடத்தப்படவில்லை. தற்போது குளத்தில் போதுமான தண்ணீர் உள்ளதால் தெப்பத் திருவிழா நடத்தவேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து ராஜ்யசபா எம்.பி ராஜேஷ்குமார் இது குறித்து தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றார். தமிழக அறநிலையத்துறை அனுமதியின் பேரில், 100 ஆண்டுகளுக்குப் பிறகு கமாலலயக்குளத்தில் தெப்பத்தேர் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், கலெக்டர் உமா, ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமார், லோக்சபா எம்.பி.மாதேஸ்வரன், எம்எல்ஏ ராமலிங்கம் ஆகியோர் தெப்பத்தேரோட்டத்தை வைத்தனர். கலந்துகொண்டு துவக்கி இதனைத் அரங்கநாதர், தொடர்ந்து, நரசிம்மர், ஆஞ்சநேயர் ஆகிய சுவாமிகளின் உற்சவ மூர்த்திகள், அருள்மிகு நரசிம்ம திருக்கோயிலில் இருந்து, சுவாமி மங்கள வாத்தியம் முழங்க, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, குளம் அருகே உள்ள நாமகிரி தாயார் மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டு அங்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் தெப்பத்தேருக்கு எழுந்ருளினார்கள். அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர், வண்ண மின் விளக்குகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தேர் கமலாலயக்குளத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். 100 ஆண்டுகளுக்கு பிறகு நாமக்கல் கமலாலயக் குலத்தில் நடைபெற்ற தெப்பத்தேர் விழாவில் நாமக்கல் சுற்றுவட்டாரத்தைச் ஆயிரகணக்கான சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரசினம் செய்தனர். நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பில், போலீஸ் எஸ்.பி. ராஜேஷ்கண்ணன் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்
Next Story