100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் தேசப்பிதா மகாத்மா காந்தி பெயரை நீக்கிய மத்திய அரசினை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

X
Ponneri King 24x7 |21 Dec 2025 1:16 PM IST100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் தேசப்பிதா மகாத்மா காந்தி பெயரை நீக்கிய மத்திய அரசினை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் தேசப்பிதா மகாத்மா காந்தி பெயரை நீக்கிய மத்திய அரசினை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் 100 நாள் பணியில் தேசப் பிதா மகாத்மா காந்தியின் பெயரை நீக்கி திட்டத்தை முடிவுக்கு கொண்டு வர நினைக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்து கும்மிடிப்பூண்டி பஜார் வீதியில் பொன்னேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை. சந்திரசேகர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது காந்தியின் உருவப்படத்தை கையில் வைத்துக் கொண்டு மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதில் காங்கிரஸ் கட்சியின் மாநில துணை தலைவர் சதாசிவலிங்கம் மாநில செயலாளர் வழக்கறிஞர் சம்பத் வட்டார தலைவர் ஜெயசீலன் புருஷோத்தமன் வழக்கறிஞர் கார்த்திகேயன் பிரேம் வினோத் மகளிர் அணி சித்ரா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்
Next Story
