100 நாள் வேலை திட்ட பெயர் பொறித்து பாடைக்கட்டி தூக்கி வந்ததற்கு போலீசார் அனுமதி மறுத்தனர் பரபரப்பு ஏற்பட்டது.

மத்திய அரசு 100 நாள் வேலைத்திட்டத்தின் பெயரை மாற்றியதை கண்டித்து திமுக சார்பில், பெரம்பலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 100 நாள் வேலை திட்ட பெயர் பொறித்து பாடைக்கட்டி தூக்கி வந்ததற்கு போலீசார் அனுமதி மறுத்தனர் பரபரப்பு ஏற்பட்டது.
மத்திய அரசு 100 நாள் வேலைத்திட்டத்தின் பெயரை மாற்றியதை கண்டித்து திமுக சார்பில், பெரம்பலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 100 நாள் வேலை திட்ட பெயர் பொறித்து பாடைக்கட்டி தூக்கி வந்ததற்கு போலீசார் அனுமதி மறுத்தனர் பரபரப்பு ஏற்பட்டது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தினை மத்திய அரசு பெயர் மாற்றம் செய்துள்ளது. இதனை கண்டித்து திமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பெரம்பலூர் மாவட்ட திமுக சார்பில் அதன் மாவட்ட பொறுப்பாளர் ஜெயகதீசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக, மதிமுக, காங்கிரஸ், விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் . தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். கூட்டத்தில் மத்திய அரசை கண்டித்தும், 100 நாள் வேலை திட்டத்தின் பெயரை மாற்றியதையும் கண்டித்தும் அவர்கள் முழக்கமிட்டனர். இதனைத் தொடர்ந்து 100 நாள் வேலை திட்டத்திற்கு பிரதமர் மோடி பாடைக் கட்டி விட்டதாக கூறி அது குறித்த வாசகங்கள் அடங்கிய பாடையை திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்தில் இருந்து பாலக்கரை நோக்கி முழக்கமிட்டவாறு தூக்கி சென்றனர். அங்கிருந்த, பாதுகாப்பு போலீசார், ஆர்ப்பாட்டத்திற்கு மட்டுமே அனுமதி, இது போன்ற செயல்பாடுகளுக்கு அனுமதி இல்லை என்று கூறி, தொடர்ந்து செல்ல அனுமதி மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த பாடையை போலீசார் கைப்பற்றி எடுத்துச் சென்றனர்.
Next Story