நாகை மாவட்டத்தில் 24 மணி நேர சாராய வேட்டையில் 13நபர்கள் கைது
பறிமுதல் செய்யப்பட்ட சாராயம்
நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங், உத்தரவின் பேரில் கள்ளச்சாராய விற்பனை மற்றும் கடத்தல் ஆகிய குற்றத்தை முழுவதுமாக கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில்,
வெளிப்பாளையம், கீழையூர், கீழ்வேளூர், வேதாரணியம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு ,நாகப்பட்டினம் நகர காவல் நிலையம், திருக்கண்ணபுரம், நாகப்பட்டினம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிய ஆகிய காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் சட்ட விரோதமாக கள்ளச்சாராய விற்பனை குற்றத்தில் ஈடுபட்ட 13 நபர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் அவர்களிடமிருந்து 678 லிட்டர் பாண்டி சாராயம் மற்றும் மூன்று இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இது போன்ற கள்ள சாராய விற்பனை மற்றும் கடத்தல் குற்றத்தில் ஈடுபட்டால் குண்டர் சட்டம் பாயும் எனவும் எச்சரிக்கை பிறப்பித்துள்ளார்கள்.