ஜன.15, 26-ல் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை
Chennai King 24x7 |10 Jan 2025 2:44 PM GMT
வரும் ஜனவரி 15 திருவள்ளுவர் தினம், ஜனவரி 26 குடியரசு தினம் ஆகிய இரு தினங்களில் டாஸ்மாக் கடைகளில் மதுபானம் விற்பனை செய்யக் கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஜனவரி 15 திருவள்ளுவர் தினம் மற்றும் ஜனவரி 26 குடியரசு தினம் ஆகிய இரண்டு நாட்களில் தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) விதிகள் 2003, விதி 12 மற்றும் தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள் 1981 விதி 25II(a) ஆகியவற்றின் கீழ் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் (FL1) மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள் FL2 உரிமம் கொண்ட கிளப்புகளைச் சார்ந்த பார்கள், FL3 உரிமம் கொண்ட ஹோட்டல்களைச் சார்ந்த பார்கள் மற்றும் FL3(A), FL3(AA) மற்றும் FL11 உரிமம் கொண்ட பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டு, ஜன.15 திருவள்ளுவர் தினம் மற்றும் ஜன.26 குடியரசு தினம் ஆகிய இரண்டு தினங்களில் மதுபானம் விற்பனை செய்யக் கூடாது. தவறினால் மதுபானம் விற்பனை விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story