ஆர்டிஇ திட்டத்தின் மூலம் 1,747 விண்ணப்பங்கள் தேர்வு
பள்ளிகள்
விருதுநகர் மாவட்டத்தில் ஆர். டி .இ திட்டத்தின் மூலம் 1,747 விண்ணப்பங்கள் தேர்வு-155 மெட்ரிக் பள்ளிகளில் இடங்கள் ஒதுக்கீடு விருதுநகர் மாவட்டத்தில் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் (ஆர்.டி .இ) திட்டத்தின் மூலமாக மாவட்டம் முழுவதிலும் இருந்து சுமார் 2,747 விண்ணப்பங்களில் தேவையான 1,747 விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு,
155 தனியார் மெட்ரிக் பள்ளிகளில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலக தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 29 பிரிவு 12 1 சி-யின் படி அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நழிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு நுழைவு நிலை எல்கேஜி வகுப்பில் சேர குறைந்தபட்சம் 25 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்படும்,
பொருட்டு ஆர். டி. இ திட்டம் மூலமாக விருதுநகர் மாவட்டத்தில் தகுதியுள்ள 155 தனியார் மெட்ரிக் பள்ளிகளில் தேவையான 1,747 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.