+2 பொதுதேர்வு: மாணவ மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் வாழ்த்து

+2 பொதுதேர்வு: மாணவ மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் வாழ்த்து
X
கன்னியாகுமரி
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா வெளியிட்டுள்ள அறிக்கை:-        குமரியில் 22,461 மாணவர்கள் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை  எழுத உள்ளனர். பன்னிரண்டாம் வகுப்பு தேர்வை எதிர்கொள்ள இருக்கும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வை சிறந்த முறையில்எதிர் கொள்வதற்காக, இந்த வருடம் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.       அனைத்து மாணவர்களையும் தேர்ச்சியுற செய்ய வேண்டும் என்ற நோக்கில் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு பல்வேறு கட்ட மீளாய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. ஒழுங்காக பள்ளிக்கு வருகை புரியாத மாணவர்களை சிறப்பு முயற்சிகள் மூலம் பள்ளிக்கு வருகை புரிய செய்து, அம் மாணவர்களுக்கு    சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.        பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை அனைத்து மாணவர்களும் சிறப்பான முறையில் எதிர்கொள்ள தேவையான அனைத்து கட்ட முயற்சிகளையும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் எடுத்துள்ளார்கள். தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட வழிகாட்டுதலின்படி, மாணவர்களை சிறப்பாக தயாரித்து உள்ளார்கள். தேர்வு நடைபெறும் மையங்களில் மாணவர்கள் பாதுகாப்பாக தேர்வு எழுதுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில், பிற துறை அலுவலர்களுடன் இணைந்து பள்ளிக் கல்வித் துறை செய்துள்ளது.      தேர்வுக்கு செல்லும் மாணவர்கள் எந்த அச்சமும் இன்றி தைரியத்துடன், தேர்வை எழுதி, நல்ல வெற்றி வாய்ப்புகளை சூடவேண்டும் என மனதார வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
Next Story