காஞ்சி வரதர் கோவில் சீரமைப்பு பணிக்கு ரூ.2 கோடி ஒதுக்கீடு

காஞ்சி வரதர் கோவில் சீரமைப்பு பணிக்கு ரூ.2 கோடி ஒதுக்கீடு

காஞ்சி கோவில்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் சீரமைக்கும் பணிக்காக ரூபாய் இறந்து கோடி ஒதுக்கீடு செய்து டெண்டர் விடப்பட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத் துறை சார்பில், கடந்தாண்டு நடந்த சட்டசபை கூட்டத்தொடரில், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் 25 கோடி ரூபாயிலும், செரப்பணஞ்சேரி வீமீஸ்வரர் கோவில் 7 கோடி ரூபாயிலும் என, பல்வேறு கோவில்கள் சீரமைக்கப்பட்டு திருப்பணிகள் நடைபெறும் என அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அ

தைத் தொடர்ந்து, பல்வேறு கோவில்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து, திருப்பணிகள் நடக்கின்றன. வரதராஜ பெருமாள் கோவிலில் மேற்கொள்ள வேண்டிய திருப்பணிகள் குறித்து, கோவில் நிர்வாகம் ஏற்கனவே கருத்துருக்கள் அனுப்பியிருந்தது. இந்நிலையில், கோவிலில் மேற்கொள்ள வேண்டிய சில பணிகளுக்கு, அறநிலையத் துறை ஒப்புதல் வழங்கி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதன்படி, வரதராஜ பெருமாள் கோவிலில்,

உபசன்னிதிகள், 100 கால் மண்டபம், அரச மரம் அமைந்துள்ள இடத்தை புதுப்பித்து சீரமைக்கும் பணிகளுக்கு, 55.28 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், கிழக்கு ராஜகோபுரத்தை புதுப்பிக்க 68.96 லட்ச ரூபாயும், பொற்றாமரை குளத்தை சுற்றிலும் கருங்கல்லால் ஆன கைப்பிடி சுவர் கட்ட 84.13 லட்ச ரூபாய் என, மொத்தம் 2.08 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து டெண்டர் விடப்பட்டுள்ளது.

Tags

Next Story