பெண்ணுக்கு நஷ்டஈடு தராததால் 2 அரசு பேருந்துகள் ஜப்தி

பெண்ணுக்கு நஷ்டஈடு தராததால் 2 அரசு பேருந்துகள்  ஜப்தி

ஜப்தி செய்யப்பட்ட பேருந்து 

திருச்சி மாவட்டம் வாளாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ரபீக். இவரது மகன் சிராஜ் 27., இவர் அரியலூரில் உள்ள ஒரு ஆப்டிகல்ஸ் கடையில் தொழில்நுட்ப வல்லுனராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் தேதி பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வாளாடி நோக்கி சென்று கொண்டிருந்த போது திருச்சி -சிதம்பரம் நெடுஞ்சாலையில் பூவாலூர் அருகே அரசு பேருந்து மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே சிராஜ் உயிரிழந்தார். இது குறித்து சிராஜ் மனைவி கௌசிநிஷா பெரம்பலூர் மாவட்ட நீதிமன்றத்தில் தனக்கு இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் தேதி கணவரை இழந்து பாதிக்கப்பட்ட கெளசிநிஷாவிற்கு ரூ.25,06,712 இழப்பீடாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இருப்பினும் நீதிமன்ற உத்தரவினை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் நிறைவேற்றவில்லை. இதனை தொடர்ந்து கௌசிநிஷா நீதிமன்ற நிறைவேற்று மனுவை தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த மாவட்ட நீதிபதி பல்கீஸ் பாதிக்கப்பட்ட கெளசிநிஷாவிற்கு வட்டியுடன் ரூ.38,92,547 ரூபாயை செலுத்த வேண்டும், தவறினால் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.

போக்குவரத்து கழகம் நஷ்டஈடு தராததால் இதனையடுத்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் பெரம்பலூர் கிளைக்கு சொந்தமான பேருந்து ஒன்று ஜூலை 12ஆம் தேதி பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் சென்னைக்கு செல்ல நின்று கொண்டிருந்த போது நீதிமன்ற அமீனா பேருந்தில் நோட்டீசை ஒட்டி ஜப்தி செய்தார். இதனை தொடர்ந்து அந்த பேருந்து நீதிமன்றத்திற்கு எடுத்துச் எடுத்துச் செல்லப்பட்டது இதனைத் தொடர்ந்து அந்த வழக்கில் 18 லட்சம் ரூபாய் மட்டும் போக்குவரத்து துறை சார்பில் நீதிமன்றத்தில் பணத்தைக் கட்டி பேருந்தை மீட்டு உள்ளனர், இந்நிலையில் மீதமுள்ள பணத்தை கட்டாமல் இருந்ததால் மீண்டும் நிறைவேற்றுமான தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து, மீதமுள்ள தொகை வட்டியுடன் 21 லட்சத்தி 31 ஆயிரத்து 782 கட்டாததால், அரசு பேருந்துகளை ஜப்தி செய்ய நீதிபதி உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து டிசம்பர் 6ஆம் தேதி பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த இரண்டு அரசு பேருந்துகளை அமீனா நோட்டீஸ் ஒட்டி ஜப்தி செய்தார்.இதனைத் தொடர்ந்து இரண்டு பேருந்துகளும் நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

Tags

Next Story