வாகன சோதனையில் கஞ்சா பறிமுதல்
சிவகங்கை அருகே வாகன சோதனையில் 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
சிவகங்கை அருகே வாகன சோதனையில் 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அருகே மலம்பட்டி சோதனை சாவடியில் தாலுகா இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வாகன சோதனையில் ஈடுபட்டார். அந்த வழியாக வந்த சுந்தரநடப்பை சேர்ந்த முத்துக்குமார் மகன் சந்தோஷ்குமார் என்ற கட்டாரி(22), மதுரை மாவட்டம் வடக்கம்பட்டியை சேர்ந்த அன்னச்சாமி மகன் விக்னேஷ் (22), மட்டாங்கிபட்டியை மூக்கையன் மகன் ரவீந்திரன் (29) மூவரையும் சோதனை செய்துள்ளார். அப்போது 2 கிலோ கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தநிலையில் சந்தோஷ்குமாரையும், விக்னேைஷையும் போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய ரவீந்திரனை சிவகங்கை தாலுகா போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story