200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முற்றுகை

X

திண்டுக்கல் - குமுளி சாலையில் அமைந்துள்ள பித்தளைப்பட்டியில் மேம்பாலம் மற்றும் 4 வழிச்சாலை மாற்ற 10 வருடம் கோரிக்கை விடுத்தும் அதனை பரிசீலனை செய்யாததால் மாவட்ட ஆட்சியர் கட்டடத்தை முற்றுகையிட்ட 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள்
திண்டுக்கல் மாவட்டம் பித்தளைப்பட்டி, வக்கம்பட்டி, அனுமந்தராயன் கோட்டை, வீரக்கல் ஆகிய பகுதிகள் திண்டுக்கல், குமுளி இரண்டு வழிச்சாலையாக அமைந்துள்ளன. இதனை நான்கு வழிச்சாலையாகவும், பித்தளைபட்டி அருகே மேம்பாலம் அமைக்கவும் கடந்த 10 வருடமாக அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். குறிப்பாக அப்பகுதி மக்கள் காய்கறிகள் பூக்கள் அதிகளவில் விவசாயம் செய்கின்றனர். அவர்கள் தங்கள் விவசாயம் செய்த பொருட்களை திண்டுக்கல் அல்லது ஒட்டன்சத்திரம் கொண்டு செல்வதற்கு இந்த சாலையை பயன்படுத்த வேண்டியுள்ளது. அதேபோல் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பள்ளி, கல்லூரி என அனைத்து தேவைகளுக்காக திண்டுக்கல் வருவதற்காக பயன்படுத்தும் சாலையாகவும் இருந்து வருகிறது. மேலும் கொடைக்கானல், கேரளா போன்ற சுற்றுலா செல்லக்கூடிய முக்கிய வழித்தடமாகவும் இந்த வழித்தடம் அமைந்துள்ளது. இந்த சாலையில் வருடத்திற்கு 100க்கும் மேற்பட்ட நபர்கள் வாகன விபத்தில் உயிரிழந்து வருகின்றனர். இதனை தடுக்கும் விதமாக அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் 200க்கும் மேற்பட்டோர் இன்று காலை மாவட்ட ஆட்சியரை சந்தித்து இரண்டு வழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றுவதற்கு மனு அளிக்க வந்தனர். ஆனால் மாவட்ட ஆட்சியர் இல்லாத காரணத்தினால் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்தனர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் வராததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடத்தின் வெளியே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக வந்த காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் இணைந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கட்டிடத்தின் வெளியே உள்ள பூங்காவில் பொதுமக்கள் காத்திருந்தனர்.
Next Story