20,000 பேர் பங்கேற்ற மாரத்தான் போட்டி
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் கே எஸ் ஆர் கல்வி நிறுவனம் மற்றும் தமிழ்நாடு காவல்துறை இணைந்து நடத்தியஐநாவின் சஸ்டைனல் டெவலப்மெண்ட் கோல்ஸ்என்ற நிகழ்வின் ஒரு பகுதியாக போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்ட மினி மராத்தான் போட்டி ஒன்பது பிரிவுகளாக நடந்த போட்டிகளை நாமக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன், நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் சின்ராஜ், கே எஸ் ஆர் கல்வி நிறுவனங்களின் தலைவர் சீனிவாசன் முதன்மை நிர்வாகி அகிலா முத்துராமலிங்கம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
அதிகாலை ஐந்து முப்பது மணிக்கு அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இருந்துதொடங்கிய ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்ட 10 கிலோமீட்டர் தூர மாரத்தான் போட்டிகளை நாமக்கல்மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.இதே போல் ஈரோடு ரோடு அருகில் இருந்து ஆண்கள் பெண்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்ட ஐந்து கிலோ மீட்டர் தூர மரத்தான் போட்டிகளையும் இரண்டரை கிலோ மீட்டர் தூரம்கொண்ட மரத்தான் போட்டிகளில்ஆண் குழந்தைகள் பெண் குழந்தைகள் கல்லூரி வளாகத்தில்ஓடினார்கள். இதே போல் ஒரு கிலோ மீட்டர் தூரம் கொண்ட போட்டிகளில் ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சிறுமிகள் கலந்து கொண்டனர். முதல் ஆறு இடங்களை பிடித்தவர்களுக்குரூ 5 லட்சம் மதிப்பிலான ரொக்க பரிசுகளும் சான்றுகளும் பதக்கங்களும் வழங்கப்பட்டது.போட்டிகளில் கலந்து கொண்ட அனைவருக்கும் பங்கேற்பாளர் சான்றிதழ் வழங்கப்பட்டது.பரிசளிப்பு விழா நிகழ்ச்சியில் நாமக்கல் பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் சின்ராஜ், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மற்றும் மண்டல நகர அமைப்பு குழு உறுப்பினர் மதுரா செந்தில், அட்மா தலைவர்ஒன்றிய திமுக செயலாளர் வட்டூர் தங்கவேல்,கே எஸ் ஆர் கல்வி நிறுவனங்களின் தலைவர் சீனிவாசன் முதன்மை செயல் அலுவலர் அகிலா முத்துராமலிங்கம்செயல் அலுவலர் தியாகராஜா மற்றும் டீன் மோகன், கல்லூரி முதல்வர்கள் பேராசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.