மாநகராட்சி அனுமதி பெறாமல் கட்டப்பட்ட 23 வீடுகள்

மேலஅனுப்பானடியில் மாநகராட்சி அனுமதி பெறாமல் கட்டப்பட்ட 23 வீடுகள் குறித்து மாநகராட்சி அதிகாரிகள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேல அனுப்பானடி சிறுவியாபாரிகள் சங்கத் தலைவர் மாரியப்பன் தெரிவித்துள்ளார்.

மேலஅனுப்பானடியில் வசித்து வருபவர் மாரியப்பன். இவர் மேல அனுப்பானடி சிறு வியாபாரிகள் சங்கத் தலைவராக செயல்பட்டு வருகிறார். செயலாளராக மோகனசுந்தரம் உட்பட 33 பேர் இந்தச் சங்கத்தில் உள்ளனர். 1996ஆம் ஆண்டு மேல அனுப்பானடியில் வீட்டு வசதி வாரியத்திற்குச் சொந்தமான 66 சென்டு காலியிடத்தை சங்கத்திற்காக மாரியப்பன் ஏலம் மூலம் வாங்கி உள்ளார். இதற்காக 1998ஆம் ஆண்டு 32 லட்சம் உறுப்பினர்களிடம் வசூலித்து பணம் செலுத்தி உள்னார்.

திடீரென்று வீட்டு வசதிவாரியம் மேலும் ரூபாய் 1 லட்சம் செலுத்தினால் தான் கிரயப்பத்திரம் தரமுடியும் என்று கூறியது. இதை எதிர்த்து மாரியப்பன் நீதிமன்றத்திற்குச் சென்றார். நீதிமன்றம் விசாரணை நடத்தி மூன்று மாதத்திற்குள் ரூ 19 லட்சத்தை சிறு வியாபாரிகள் சங்கம் செலுத்த வேண்டும் என்று தீர்ப்பளித்தது. ஆனால் இந்தப் பணத் தைத் தர உறுப்பினர் கள் யாரும் முன்வர வில்லை. இதனால் சங்கத் தலைவர் மாரியப்பன் தனது சொந்த முயற்சியில் பணத்தை செலுத்தினார். இதைத்தொடர்த்து தலைவர் மாரியப்பன் பெயரில் 66 கிரயத்திற்கான உத்தரவை வழங்கியது பின்னர் உறுப்பினர்களிடம் பணம் கேட்டபோது கருத்து வேறுபாடு ஏற்பட்டன.

இந்த நிலையில் மாரியப்பனை தனியாக ஓரம் தள்ளிவிட்டு மோகன சுந்தரம் தலைமையில் உறுப்பினர்கள் ஒன்று கூடி மோகன சுந்தரத்தை தலைவராக ஏற்றுக் கொண்டனர். இதையறிந்த மாரியப்பன் நீதிமன்றத்திற்கு சென்றார். நீதிமன்றத் தில் வழக்கு நிலுவை யில் இருக்கும்போது மோகனசுந்தரத்தை தலைவராக மாவட்டப் பதிவாளர் அலுவலகம் ஏற்றுக்கொள்ளவில்லை. இன்னும் தலைவாரக மாரியப்பன் தொடர்ந்து வருகிறார். பேச்சுவாத்திதை மூலம் மாரியப்பன் தனியாக போராடி வருகிறார்.இந்த நிலையில் ஒரிஜினல் பத்திரம் இல்லாமல் 28 பேர் ஒதுக்கப்பட்ட இடத்தில் அடுக்குமாடி வீடுகளை கட்டியுள்ளனர் இதற்கு மாநகராட்சியிடம் எந்த அனுமதியும் பெறவில்லை ஒரிஜினல் பத்திரம் தலைவர் மாரியப்பன் வசம் இருப்பதால் உறுப்பினர்கள் வேறு வழியின்றி போலி ஆவணங்களை தயாரித்து வீடுகள் கட்டி இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கு மாநகராட்சியில் சில ஊழியர்கள் உடந்தையாக இருந்ததாகவும் தெரிய வருகிறது இலக்கு மண்டலத்தில் பணியாற்றிய சரவணன் மாலு முருகேஸ்வரி ரங்கராஜன் அர்ஜுனன் ஆகியோர் சங்கத் தலைவர் மாரியப்பனுக்கு எதிராக பணம் வாங்கிக் கொண்டு செயல்பட்டதாக மாரியப்பன் தெரிவித்தார். தற்போது மாவட்ட நீதிமன்றம், உயர்நீதி மன்றம் கிளையில் வழக்குகள் நடைபெற்று வருகிறது. இந்தச் சூழ்நிலையில் மோகனகந்தரத்திற்கு சொந்தமான இடத்தில் அவர் மாநகராட்சியிடம் முன் அனுமதி பெறாமல் கடை கட்டியதாகவும், அதற்கு மின் இணைப்பு பெற்றதாகத் தெரிய வந்ததைத் தொடர்ந்து சங்கத் தலைவர் மாரியப்பன் பல்வேறு இடங்களில் புகார் மனு அளித்துள்ளார்.

அதன் அடிப்படையில் புதிதாக கட்டப்பட்ட கடைக்கு மின்இணைப்பு துண்டிக் கப்பட்டது. சுமார் 15 ஆண்டுகளாக போராடி வரும் மாரியப்பன் நியாயம் கிடைப்பதற் காக அதிகாரிகளை யில் தினமும் பார்த்து வருகிறார். எதிர் தரப்பினர் பணத்தைக் கொடுத்து அதிகாரி களை சரிக்கட்டி வருவதால் இவரால் எளிதில் நீதியைப் பெறமுடியவில்லை. எங்கு சென்றாலும் பணம் பணம் என்று கேட்கிறார்கள். அதிகாரிகள் நினைப்பது கேட்கிறார்கள் என்றும் தனது பெயரில் உள்ளவையும்வேறொரு பெயருக்கு மாற்றப்பட்டு இருப்பதையும் வேதனையுடன் தெரிவித்தார் 72 வயதாகும் மாரியப்பன் நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பை ஏற்றுக் கொள்வேன் என்றும் தனது தவறுக்கு எது தரப்பினர் மன்னிப்பு கேட்க தொடங்கினால் அவ்வாறுகளிடம் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் உறுதியுடன் தெரிவித்தார்.

ஒரிஜினல் கிரையபத்திரம் இல்லாமல் பிளான் அப்ரூவல் விட்டு வரி மாற்றம் ஆகிய பணிகள் நடப்பது வேதனை அளிக்கிறது என்றும் எதற்கு மதுரை மாநகராட்சி ஆணையாளர் உடனடி நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும் என்று மாரியப்பன் தெரிவித்தார். இப்படி மாநகராட்சியில் எத்தனையோ முறைகேடுகள் கண்ணுக்கு தெரியாமல் நடைபெற்று வருகின்றன. பாதிககப் பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. பணம் இருந்தால் மட்டுமே எதையும் சாதிக்க முடியும் என்று அதிகாரிகள் நினைப்பது தவறு. உண்மை என்றாவது ஒரு நாள் வென்றே தீரும். அப்போது முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் தலை குனிய நேரிடும் என்று -ஆவேசத்துடன் சங்கத் தலைவர் மாரியப்பன் தெரிவித்தார்.

மேலஅனுப்பானடியில் உள்ள 66 சென்ட் இடத்தில் கட்டப்பட்ட வீடுகளை மாநகராட்சி உயர்மட்டக் குழு நேரில் சென்று விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட வர்களிடம் கிரயப் பத்திரம் இருக்கிறதா? எப்படி அவர்கள் வீடு கட்டினார்கள்? வீட்டு வரி ரசீது உள்ளதா? அது யார் பெயரில் உள்ளது?. பிளான் அப்ரூவல் வாங்காமல் எப்படிக் கட்டியுள்ளார்கள்? என்பதை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், செயலாளராக இருக்கும் மோகன சுந்தரம், கடைமீதும் கட்டிய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சங்கத் தலைவர் மாரி யப்பன் தெரிவித்தார்.

Tags

Next Story