24 வது ஆட்சியராக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றார் பிரதாப்

24 வது ஆட்சியராக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் ஐ ஏ எஸ் பொறுப்பேற்றார் மாவட்டத்தில் மக்கள் எந்த நேரமும் சந்திக்கக்கூடிய ஆட்சியராக இருப்பேன் என பொறுப்பேற்றதும் உறுதி
24 வது ஆட்சியராக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் ஐ ஏ எஸ் பொறுப்பேற்றார் மாவட்டத்தில் மக்கள் எந்த நேரமும் சந்திக்கக்கூடிய ஆட்சியராக இருப்பேன் என பொறுப்பேற்றதும் உறுதி திருவள்ளூர் மாவட்டத்தின் 24-வது புதிய ஆட்சியராக பிரதாப் ஐஏஎஸ் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார் அவருக்கு ஆவடி மாநகராட்சி ஆணையர் கந்தசாமி பொன்னேரி சார் ஆட்சியர் வாகே சங்கத் பல்வந்த் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் பயிற்சி ஆட்சியர் ரிஷப் பண்ட் மாவட்ட திட்ட இயக்குனர் ஜெயக்குமார் திருவள்ளூர் கோட்டாட்சியர் கற்பகம் திருவள்ளூர் வட்டாட்சியர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் புதிய ஆட்சியர் பிரதாப்பை மகிழ்ச்சியுடன் வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர் புதிய ஆட்சியராக பொறுப்பேற்ற பிரதாப் சட்ட ஒழுங்கை பாதுகாப்பதில் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் மக்கள் எந்த நேரத்திலும் சந்திக்கக்கூடிய ஆட்சியராக இருப்பேன் என்றும் மாவட்டத்தில் உள்ள காவல்துறை சார்ந்த பிரச்சனைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் ஆவடி மாநகராட்சி கமிஷனர் சங்கர் உள்ளிட்டோருடன் பேசி அனைத்து பிரச்சனைகளுக்கும் சிறிய பிரச்சனைகளாக இருந்தாலும் அவற்றிற்கு தீர்வுக்கான நடவடிக்கை எடுப்பேன் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் ஆட்சியர் உறுதிபடத் தெரிவித்தார்
Next Story