25 லட்சம் மதிப்புடைய செம்மரக்கட்டை கடத்தி வந்த இரண்டு வாலிபர்கள் கைது
Tiruvallur King 24x7 |26 Sep 2024 2:48 AM GMT
திருத்தணி அருகே ஆந்திராவில் இருந்து 25 லட்சம் மதிப்புடைய செம்மரக்கட்டை கடத்தி வந்த இரண்டு வாலிபர்கள் கைது
திருத்தணி அருகே ஆந்திராவில் இருந்து 25 லட்சம் மதிப்புடைய செம்மரக்கட்டை கடத்தி வந்த இரண்டு வாலிபர்கள் கைது திருத்தணி அருகே சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள முருகம்பட்டு கிராமத்தின் பகுதியில் திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் இவரது தனிப்படை உதவி ஆய்வாளர் குமார் தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் ஆந்திராவிலிருந்து வரும் வாகனங்களை தணிக்கை செய்யும் பொழுது அதி வேகமாக வந்த சிறிய சரக்கு வாகனத்தை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை மேற்கொள்ளும் பொழுது அந்த சரக்கு வாகனத்தில் 18 செம்மரக்கட்டைகள் இரண்டு டன் மதிப்புடையது முதல் தர செம்மரக்கட்டைகள் வெளிநாட்டில் 25 லட்சம் மதிப்புடையது இதனை சென்னைக்கு கடத்த முயன்ற. ஆந்திர மாநிலம் இந்த வாகனத்தின் ஓட்டுனர் 1)கணேசன் வயது (45) புதூர் கிராமம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் மற்றொருவர் ஜோதீஸ்வரர் ரெட்டி வயது (44) நடுமூர் கிராமம் கொட்டாமல் , சித்தூர் மாவட்டம் இவர்கள் இருவரையும் கைது செய்து போலீசார் திருத்தணி வனத்துறை அதிகாரிகள் இடத்தில் ஒப்படைக்காமல் ஏழு மணி நேரம் திருத்தணி காவல் நிலையத்தில் வைத்துள்ளனர் காவல் நிலையத்தில் இந்த வழக்கு பதிவு செய்ய முடியாது என்பது காவல்துறை அதிகாரிகளுக்கு தெரியும் அப்படி இருந்தும் வனத்துறை அதிகாரிகளுக்கு ஒப்படைக்காமல் கடத்தி வந்த குற்றவாளிகளை ஏழு மணி நேரம் காவல் நிலையத்தில் வைத்திருந்த மர்மம் என்ன என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர் மேலும் வனத்துறை அதிகாரிகள் எங்களிடம் ஒப்படைக்கவில்லை என்று தீர்க்கமாக தெரிவித்துவிட்டனர் இந்த செம்மரக்கட்டைகள் வனத்துறை பாதுகாப்பு சட்டத்தில் படி தான் வழக்கு பதிவு செய்ய முடியும் ஆனால் இதை தெரிந்தும் திருத்தணி காவல்துறை அதிகாரிகள் எதற்காக குற்றவாளிகளையும் மற்றும் செம்மரக்கட்டையும் காலை 7:00 மணிக்கு பிடித்து நண்பகல் ஒரு மணி வரை வைத்திருந்த மர்மம் என்ன என்று வனத்துறை அதிகாரிகளே கேள்வி எழுப்பி உள்ளனர் காவல்துறை அதிகாரிகள் உரிய விளக்கம் அளிக்கவில்லை மேலும் செம்மரக்கட்டை பிடிக்கப்பட்டுள்ளது குறித்து காவல்துறை அதிகாரியிடம் திருத்தணி காவல் நிலையத்தில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி எதற்கு அப்படி ஒன்றும் படிக்கவில்லை என்று 7 மணி நேரம் காக்க வைத்து வீடியோ எடுத்துவைத்த திருத்தணி காவல்துறை உதவி ஆய்வாளர் குணசேகர் இதுகுறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
Next Story