ஜன.25ல் ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்தை ஆய்வு செய்த அதிகாரிகள்

ஜன.25ல் ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்தை ஆய்வு செய்த அதிகாரிகள்
X
குமாரபாளையம் ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்தை ஆர்.டி.ஓ. தலைமையிலான அரசு அனைத்து துறை அதிகாரிகள் பார்வையிட்டனர்.
குமாரபாளையம் ஜல்லிக்கட்டு விழா ஜனவரி 25ம் தேதி வளையக்காரனூர் எஸ்.எஸ்.எம். பொறியியல் கல்லூரி பின்புறம் நடைபெற உள்ளது. இங்கு திருச்செங்கோடு ஆர்.டி.ஓ. லெனின் தலைமையில், பள்ளிபாளையம் டி.எஸ்.பி. கவுதம், குமாரபாளையம் தாசில்தார் பிரகாஷ், இன்ஸ்பெக்டர் தவமணி, உள்ளிட்ட , கால்நடை உதவி இயக்குனர், வட்டார போக்குவரத்து அலுவலர், வட்டார மருத்துவ அலுவலர், தீயணைப்பு ஆய்வாளர், உள்ளிட்ட பல அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். குமாரபாளையம் ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ஜல்லிக்கட்டு வினோத்குமார், விழா ஏற்பாடுகள் குறித்து கூறினார். விழாக் குழுவினருக்கு அதிகாரிகள் பலரும் ஆலோசனைகளை வழங்கி, ஏற்பாடுகளை துரிதபடுத்த அறிவுரை வழங்கினர்.
Next Story