தூத்துக்குடியில் அங்கன்வாடி மையங்களில் 25 தொலைக்காட்சி பெட்டி

தூத்துக்குடியில் அங்கன்வாடி மையங்களில் 25 தொலைக்காட்சி  பெட்டி

தொலைகாட்சி வழங்கிய அமைச்சர்

தூத்துக்குடியில் 25 அங்கன்வாடி மையங்களில் 25 தொலைக்காட்சி பெட்டிகளின் சேவையை அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார். 

தூத்துக்குடி நகர்ப்புறத்தில் உள்ள 25 அங்கன்வாடி மையங்களில் பயிலும் குழந்தைகளை ஊக்கப்படுத்தி அவர்களது கல்வி கற்கும் திறனை அதிகரிக்கும் பொருட்டு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகளின் கீழ் ஐசிஐசிஐ வங்கியின் சமூகப் பொறுப்பு நிதியின் மூலம் பெறப்பட்ட 25 தொலைக்காட்சி பெட்டிகளின் சேவையை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் இன்று தூத்துக்குடி சக்திவிநாயகர்புரம் அங்கன்வாடி மையத்தில் துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் ஐசிஐசிஐ வங்கி அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story