பெண்ணின் வயிற்றில் 2 .5 கிலோ மண்ணீரல் அகற்றம் : ஜெம் மருத்துவர்கள் சாதனை

பெண்ணின் வயிற்றில் 2 .5 கிலோ மண்ணீரல் அகற்றம் : ஜெம் மருத்துவர்கள் சாதனை

அகற்றப்பட்ட மண்ணீரல் 

பெண்ணின் வயிற்றில் இருந்த 2 .5 கிலோ மண்ணீரலை அறுவை சிகிச்சை மூலமாக ஜெம் மருத்துவமனை மருத்துவ குழுவினர் வெற்றிகரமாக அகற்றினர்.

திருச்செங்கோட்டை சேர்ந்த 28 வயது 36 கிலோ எடை உள்ள பெண்மணி பல மருத்துவமனைகளில் ரத்தசோகை மற்றும் வயிற்றுவலிக்காக கடந்த இரண்டு வருடங்களாக சிகிச்சை எடுத்து வந்தார். இவர் ஒரு மாதங்களுக்கு முன்பு ஜெம் மருத்துவமனையில் டாக்டர் K.L.சதீஷ்குமார் பரிசோதித்தார். அந்த நோயாளிக்கு தகுந்த ரத்த பரிசோதனை மற்றும் ஸ்கேன் பரிசோதனைக்கு பிறகு மண்ணீரல் வீக்க காரணமாக ரத்தத்தில் உள்ள சிவப்பணு, மற்றும் தட்டணுக்கள் மிகவும் குறைவாக உள்ளதாக கண்டறியப்பட்டது மேலும் அவரது மண்ணீரலின் எடை சராசரியாக உள்ள மனிதனின் மண்ணீரலின் எடையை விட பத்துமடங்கு வீக்கம் கொண்ட மண்ணீரலாக கண்டு அறியப்பட்டது.

இதற்கு அவரது மண்ணீரலை முழுவதும் நீக்குவதன் மூலமாகவே அவரது நோயை சரி செய்யமுடியும் என்று அந்த நோயாளிடம் மருத்துவர் உறுதிப்படுத்தினார் மேலும் அவருக்கு தேவையான தடுப்புஊசிகள் 20 நாட்களுக்கு முன்பாகவே செலுத்தபட்டு அறுவைசிகிச்சைக்கு தயார்படுத்தப்பட்டார். மயக்கவியில் நிபுணரால் முழு மயக்க மருந்து செலுத்தப்பட்டு, அதிக ரத்தப்போக்கு இல்லாமல் அவரது மண்ணீரலை டாக்டர் K.L சதீஷ்குமார் மற்றும் செவிலியர் குழுவினரால் வெற்றிகரமாக அறுவைசிகிச்சை செய்து முற்றிலுமாக நீக்கப்பட்டது. ஜெம் மருத்துவர்கள் மற்றும் செவிலியர் குழுவினரின் தொடர்கண்காணிப்பு மூலம் பூரண குணமடைந்து நான்காவது நாள் வீடு திரும்பினார்

இச்சிகிச்சையை ஜெம் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் சி பழனிவேலு மற்றும் நிர்வாக அதிகாரி டாக்டர் பிரவீன்ராஜ் பாராட்டினார்கள் சராசரி மனிதனின் மண்ணீரலின் எடை 250 கிராம் ஆனால் இந்த பெண்மணியின் மண்ணீரல் எடையானது 2.5 கிலோ ஜீரண மண்டலம் மற்றும் லேப்ராஸ்கோப்பி சிறப்பு சிகிச்சை மையமான ஈரோடு ஜெம் மருத்துவமனை தொடங்கி பத்துவருடங்களாக செயல் பட்டு வருகிறது, ஈரோடு, திருப்பூர் நாமக்கல் சேலம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் நோயாளிகளுக்கு குறைவான கட்டணத்தில் தரமான சிகிச்சை வழங்கப்படுகிறது.

Tags

Next Story