திருப்பத்தூர் அருகே பூட்டை உடைத்து 28 சவரன் கொள்ளை
கொள்ளை போன வீடு
திருப்பத்தூர் மாவட்டம், ப.முத்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பன்னீர் மகன் சந்திரன் (44). இவர் பெங்களூரில் பில்டிங் கான்டிராக்டராக வேலை செய்து வருகிறார். இவருக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். இவர்கள் அனைவரும் பெங்களூரிலேயே தங்கி உள்ளனர். மேலும் இவர் திருவிழா நாட்களில் மட்டுமே சொந்த ஊருக்கு வந்து செல்வதுண்டு இந்த நிலையில் அதே பகுதியில் உள்ள சந்திரனின் மாமியார் துளசி (50) சந்திரனின் வீட்டை பராமரித்து வருகிறார்.
மேலும் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் நேற்று இரவு வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பீரோவில் வைக்கப்பட்டிருந்த 28 சவரன் தங்க நகை மற்றும் 500 கிராம் வெள்ளி மற்றும் 1500 ரூபாய் பணத்தை திருடி சென்றுள்ளனர் மேலும் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவின் மீது துணியை மூடி இந்த கொள்ளை சம்பவம் நடைபெற்று உள்ளது.
இந்த நிலையில் இன்று காலை மீண்டும் வீட்டை சுத்தம் செய்ய வந்த துளசி வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை அறிந்து சந்திரனுக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரின் சந்திரன் திருப்பத்தூர் கிராமிய காவல்துறையினருக்கு கொடுத்ததின் பேரில் திருப்பத்தூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் மற்றும் காவல் ஆய்வாளர் நிர்மலா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து திருட்டு சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.