இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் - ஆட்சியர் ச.உமா வழங்கினார்
ரூ.2.91 கோடி மதிப்பில் 272 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் - ஆட்சியர் ச.உமா வழங்கினார்
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், கே.எஸ்.ஆர்.தொழில்நுட்பக் கல்லூரியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா ரூ.2.91 கோடி மதிப்பில் 272 பயனாளிகளுக்கு திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், நகரமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினருமான எஸ்.எம்.மதுரா செந்தில் ஆகியோர் முன்னிலையில் இலவச வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் ரெ.சுமன், திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் சே.சுகந்தி, மாவட்ட வழங்கல் அலுவலர் த.முத்துராமலிங்கம், அட்மாக் குழுத் தலைவர் தங்கவேல், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.