அரசு கல்லூரியில் நாளை 2-ம் கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வு
மாணவர் சேர்க்கை
பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், 2024- 2025ம் கல்வி ஆண்டிற்கான முதலாமாண்டு இளநிலை மாணவர் சேர்க்கைக்கு, 2ம்கட்ட பொது கலந் தாய்வு நாளை 24ம்தேதி முதல் 26ம்தேதி வரை நடை பெற உள்ளது.
இளநிலை தமிழ், ஆங்கிலம், வணிகவியல், சமூக வியல், கணிதம், கணினி அறிவியல், இயற்பியல் ஆகிய பாடப் பிரிவுகளுக்கு பொது கலந்தாய்வு 3 நாட்கள் நடைபெறும். ஏற்கனவே விண்ணப் பித்து, கலந்தாய்வு கடிதம் ஆன்லைன் மூலம் பெற்ற வர்கள் இதில் கலந்து கொள்ளலாம்.
கலந்தாய் வில் பங்கேற்க வரும் போது, விண்ணப்ப படி வம், அசல் மாற்றுச்சான்றிதழ், 10,11 மற்றும் 12ம் வகுப்பு மதிப்பெண் பட் டியல், சாதிச் சான்றிதழ், ஆதார் அட்டை அசல் மற் றும் நகல், வங்கி கணக்கு புத்தகம் நகல், பாஸ் போர்ட்சைஸ்போட்டோ 6 ஆகியவற்றை கொண்டு வர வேண்டும்.
மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் கலந்து கொள்ளுமாறும், சேர்க்கை பெற்ற மாணவர்கள் சேர்க்கை கட்டணத்தை அன்றே அலுவலகத்தில் செலுத்த வேண்டும் என கல்லூரி முதல்வர் ரவி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.