ஆசிரியர் வீட்டில் திருடிய பெண் உள்பட 3 பேர் கைது!

ஆசிரியர் வீட்டில் திருடிய பெண் உள்பட 3 பேர் கைது!

 கைது 

காட்பாடி அருகே ஆசிரியர் வீட்டில் திருடிய பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடி செங்குட்டை காமராஜர் தெருவை சேர்ந்தவர் மணி. ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். கடந்த 8-ந் தேதி வாடகை பணம் ரூ.1 லட்சத்தை வசூல் செய்து வீட்டில் வைத்தார். இதனை நோட்டமிட்ட ஒரு பெண் உள்பட 3 மர்ம நபர்கள் அவருடைய வீட்டிற்கு வந்தனர். அவர்கள் மணியிடம் ஆவணங்கள் கேட்பது போல் விசாரித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த மணி போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வீட்டுக்குள் இருந்த செல்போனை எடுக்க சென்றார். இந்த நேரத்தில் அவர் வீட்டில் வைத்திருந்த ரூ.1 லட்சம் பணத்தை மூன்று பேரும் எடுத்துக் கொண்டு தப்பி சென்று விட்டனர்.இந்த சம்பவம் குறித்து மணி காட்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அருகில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து விசாரணை நடத்தியதில் திருட்டில் ஈடுபட்டது வேலூர் சைதாப்பேட்டையை சேர்ந்த கணபதி (25), கே.வி.குப்பத்தை சேர்ந்த மோனிஷா (23), கலவையை சேர்ந்த மோகன் (26) என்பது தெரியவந்தது.அதைத்தொடர்ந்து அவர்கள் மூன்று பேரையும் காட்பாடி போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.45 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags

Next Story