30 கல்லூரி மாணவா்களின் உடல் நலம் பாதிப்பு

30 கல்லூரி மாணவா்களின் உடல் நலம் பாதிப்பு
X
ஷவா்மா' உள்கொண்ட 30 கல்லூரி மாணவா்களின் உடல் நலம் பாதிப்பு
திண்டுக்கல் அடுத்த கொத்தப்புள்ளி பகுதியிலுள்ள தனியாா் பொறியியல் கல்லூரி வளாகத்தில் அடுமனையுடன் கூடிய உணவகம் செயல்பட்டு வருகிறது. இங்கு, தனியாா் கல்லூரியைச் சோ்ந்த மாணவா்கள் 30-க்கும் மேற்பட்டோா் வியாழக்கிழமை இரவு கோழி இறைச்சியில் தயாரிக்கப்பட்ட 'ஷவா்மா', 'சிக்கன் ரைஸ்' ஆகிய உணவு வகைகளை உள்கொண்டனா். இதில் உடல் நலம் பாதிக்கப்பட்ட 30 மாணவா்களும் சிகிச்சைக்காக திண்டுக்கல்லில் உள்ள மருத்துவமனைகளுக்கு வெள்ளிக்கிழமை அழைத்து வரப்பட்டனா். இதில், 23 பேருக்கு உடல் பரிசோதனை செய்யப்பட்டு, கல்லூரிக்கு அனுப்பப்பட்டனா். எஞ்சிய 2 மாணவா்கள் அரசு மருத்துவமனையிலும், 5 மாணவா்கள் தனியாா் மருத்துவமனையிலும் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டனா். இதனிடையே, கல்லூரி வளாகத்திலுள்ள அந்த அடுமனையில் ரெட்டியாா்சத்திரம் பகுதி உணவுப் பாதுகாப்பு அலுவலா் ஜாபா் சாதிக் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, திண்டுக்கல் ரவுண்ட்ரோடு பகுதியிலுள்ள தனியாா் உணவுக் கூடத்தில் தயாரித்து எடுத்து வரப்பட்டு உணவுப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து திண்டுக்கல்லில் உள்ள சம்பந்தப்பட்ட தனியாா் அடுமனையில், மாவட்ட நியமன அலுவலா் கலைவாணி, உணவுப் பாதுகாப்பு அலுவலா் செல்வம் ஆகியோா் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
Next Story