31 தானியங்கி மழைமானி 4 தானியங்கி வானிலை மையங்கள் - ஆட்சியர் உமா தகவல்
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 8 வட்டங்களிலும், 31 இடங்களில் தானியங்கி மழைமானிகளும், 4 இடங்களில் தானியங்கி வானிலை மையங்களும் நிறுவப்படவுள்ளன.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 8 வட்டங்களிலும் 31 இடங்களில் தானியங்கி மழைமானிகளும் 4 இடங்களில் தானியங்கி வானிலை மையங்களும் நிறுவப்படவுள்ளன.
தமிழ்நாடு முழுவதும் அனைத்து நாட்களிலும் மழைப்பொழிவு மற்றும் வானிலை நிலவரங்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள ஏதுவாக 1,400 தானியங்கி மழைமானிகள் மற்றும் 100 தானியங்கி வானிலை மையங்களை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் மூலமாக புதியதாக நிறுவ அரசினால் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 8 வட்டங்களிலும், 31 இடங்களில் தானியங்கி மழைமானிகளும், 4 இடங்களில் தானியங்கி வானிலை மையங்களும் நிறுவப்படவுள்ளன. இத்திட்டத்தின்படி, இராசிபுரம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் தானியங்கி மழைமானியானது தற்போது நிறுவப்பட்டுள்ளது. மீதமுள்ள கருவிகளும் வருகிற மார்ச் -15 முதல் நிறுவப்படவுள்ளன. இந்த திட்டமானது விரைவில் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவுள்ளது என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story