33 அடி ஸ்ரீ சண்டி கருப்பசாமி கோவிலில் சிறப்பு பூஜை ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்..

X
Rasipuram King 24x7 |3 Sept 2024 3:12 PM IST33 அடி ஸ்ரீ சண்டி கருப்பசாமி கோவிலில் சிறப்பு பூஜை ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்..
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அடுத்த அரியா கவுண்டம்பட்டி ஸ்ரீ கொங்காளம்மன் கோவில் அருகே பிரசித்தி பெற்ற 33 அடி ஸ்ரீ சண்டி கருப்பசாமி கோவிலில் அமாவாசை சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக கருப்பசாமிக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 33 சண்டி கருப்பசாமிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நெய்விளக்கு, மாவிளக்கு ஏற்றியும், பொங்கல் வைத்து கிடா வெட்டி கருப்பசாமியை வழிபட்டனர். அமாவாசை என்பதால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர்.
Next Story
