3,542 பயனாளிகளுக்கு ரூ.84.32 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்
பெரம்பலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில், “கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு புதிய வீடுகள் கட்டுவதற்கான ஆணைகள், ஊரக வீடுகள் பழுது நீக்கும் திட்டத்தின் கீழ் வீடுகளை புனரமைப்பதற்கான ஆணைகள் மற்றும் “டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் ஊராட்சிகளுக்கு உபகரணங்களை மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் இன்று (20.08.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.என்.அருண்நேரு பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலையில் வழங்கினார். இந்நிகழ்ச்சி பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மக்களுக்கு ஜே.கே திருமண மஹாலிலும் மற்றும் குன்னம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மக்களுக்கு மருதையான் கோவில் அருகே உள்ள ஆனந்தம் திருமண மஹாலிலும் நடைபெற்றது. இந்நிகழ்வில் போக்குவரத்துத்துறை அமைச்சர் பேசியதாவது பெரம்பலூர் புதிய வீடுகள் கட்டுதல் மற்றும் வீடுகளை புனரமைப்பதற்கான ஆணைகள் என மொத்தம் 3,542 பயனாளிகளுக்கு ரூ.84.32 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. எனவே, இத்திட்டத்தின் கீழ் ஆணை பெற்றுள்ள பயனாளிகள் விரைவில் தங்களைது வீடுகளை கட்டி முடிக்க வேண்டும். அப்போதுதான் அடுத்த ஆண்டு குடிசைகளில் வாழும், வீடில்லாத தகுதிவாய்ந்த பயனாளிகளை தேர்வு செய்து புதிய வீடுகள் வழங்க எளிதாக இருக்கும். இவ்வாறு தெரிவித்தார்.
Next Story