விநாயகர் கோவிலில் 3 -ம் ஆண்டு வருட அபிஷேகம்

விநாயகர் கோவிலில் 3 -ம் ஆண்டு வருட அபிஷேகம்

பெரம்பலூர் விநாயகர் கோவிலில் 3 -ம் ஆண்டு வருட அபிஷேகம் நடைபெற்றது.


பெரம்பலூர் விநாயகர் கோவிலில் 3 -ம் ஆண்டு வருட அபிஷேகம் நடைபெற்றது.
பெரம்பலூர் எடத்தெரு அரசமரத்து விநாயகர் கோவில் வருடாபிஷேகத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பெரம்பலூர் நகரம் எடத்தெருவில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் மரத்து வடக்கு விநாயகருக்கு நேற்று 3ம் ஆண்டு வருடாபிஷேகம் நடைபெற்றது. பால், தயிர், சந்தனம், பழ வகைகளுடன் அபிஷேகம் முடித்து மகா தீபாராதனை காண்பித்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பூஜைகளை செல்லப்பா சிவாச்சாரியார் செய்து வைத்தார். இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை வைத்தீஸ்வரன், ரமேஷ். மற்றும் எடத்தெரு பக்தர்கள் செய்திருந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story