பஞ்சபட்டியில்4- அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர்.
Karur King 24x7 |30 Nov 2024 12:41 PM GMT
பஞ்சபட்டியில்4- அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர்.
பஞ்சபட்டியில்4- அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுக்கா, பஞ்சப்பட்டி பகுதியில் செயல்படும் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செய்து தரக் கோரி, தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் சங்கத்தின் தலைவர் தங்கவேல் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கிளைச் செயலாளர் ரங்கன், மாவட்ட தலைவர் கந்தசாமி, மாவட்ட செயலாளர் சக்திவேல், ஒன்றிய செயலாளர் தர்மலிங்கம், மாவட்ட பொருளாளர் சுப்பிரமணியன், மாவட்ட துணை தலைவர் வீரமலை, மற்றொரு ஒன்றிய செயலாளர் நாகராஜன் உள்ளிட்ட கிருஷ்ணராயபுரம் ஒன்றிய சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு , கோரிக்கைகளை வலியுறுத்தி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தின் போது, பஞ்சப்பட்டி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, காலியாக உள்ள மருத்துவர் பணியிடங்களை நிரப்பிட வேண்டும். மருத்துவர் பணி செய்ய போதிய மருத்துவ உபகரணங்களை வழங்கிட வேண்டும். வெண்டிலேட்டர், ஆக்ஸிஜன் சிலிண்டர், ஜெனரேட்டர் வசதியுடன் கூடிய யுபிஎஸ் வசதியும் செய்து தர வேண்டும். 24 மணி நேரமும் மகப்பேறு மருத்துவம் பார்ப்பதை உறுதி செய்ய வேண்டும். என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
Next Story