4ம் நாள் சோதனை
Erode King 24x7 |11 Jan 2025 5:51 AM GMT
எடப்பாடி பழனிசாமியின் உறவினரின்வீடு, அலுவலகங்களில் 4-வது நாளாக வருமான வரித் துறை சோதனை
ஈரோடுசெட்டிபாளையம்,முள்ளாம்பரப்பு உள்ளிட்டபகுதிகளில் உள்ள முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உறவினரின் வீடுகள், அலுவலகங்களில் 4-வது நாளாக இன்றும் வருமானவரித்துறையினர்சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.ஈரோடுஅவல்பூந்துறை பகுதியை சேர்ந்தவர் என்.ராமலிங்கம். தொழிலதிபர். இவருக்கு சொந்தமாக என்.ஆர்.கட்டுமான நிறுவனம், திருமண மண்டபம், ஸ்டார்ச் மாவு ஆலை உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள்உள்ளன. ராமலிங்கத்தின் நிறுவனத்திற்கு அவரது மகன்கள் சூரியகாந்த், சந்திரகாந்த் ஆகியோர் இயக்குநர்களாக பொறுப்புவகித்து வருகின்றனர்.இவர்களதுகட்டுமான நிறுவனம் தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களிலும், ஒன்றிய, மாநில அரசுகளின் சார்பில் கட்டுமான ஒப்பந்தப்பணிகளை செய்து வருகின்றன.ராமலிங்கத்தின்இளைய மகன், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் மகனும் பெருந்துறையை சேர்ந்த தொழிலதிபர் சுப்பிரமணி என்பவரது மகள்களை திருமணம் செய்துள்ளனர். இதன்மூலமாகராமலிங்கமும், எடப்பாடி பழனிசாமியும்நெருங்கியஉறவினர்களாவர்.கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில்ராமலிங்கத்தின் சொத்து மதிப்பும்,அவரது நிறுவனத்தின்சொத்து மதிப்புகளும் கிடுகிடுவென உயர்ந்தன. இந்நிலையில், ராமலிங்கத்தின் நிறுவனத்தில் வருமான வரிஏய்ப்பு செய்ததாக கிடைத்த தகவல்களின்பேரில், ஈரோட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் என்.ஆர். கட்டுமான நிறுவனத்தின் அலுவலகம், ராமலிங்கம் வீடு, பூந்துறை சாலையில் உள்ள என்.ஆர். திருமண மண்டபம் ஆகிய இடங்களில் வருமான வரித்துறைஅதிகாரிகள் கடந்த 7ம் தேதி முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.மேலும், ராமலிங்கத்தின் நிறுவனத்துடன் வரவு செலவுதொடர்பில் இருப்பதாக கருதப்படும் ஈரோடு முள்ளாம்பரப்பை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவரும் செல்வசுந்தரம் என்பவருக்கு சொந்தமான ஆர்பிபி கட்டுமான நிறுவனத்திலும், ரகுபதிநாயக்கன்பாளையத்தில் உள்ள அவரது வீட்டிலும்வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். தவிர, பவானியை அடுத்துள்ள அம்மாபேட்டையில் ராமலிங்கம்தலைவராகவும், எடப்பாடி பழனிச்சாமியின் சகோதரிமகன் வெற்றிவேல் இயக்குநராகவும் பொறுப்பு வகித்து வரும் மரவள்ளி கிழங்கு அரவை (ஸ்டார்ச்மாவு) ஆலையிலும் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். இந்நிலையில், அதிமுக பொதுசெயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியின்உறவினரான ராமலிங்கத்தின் வீடு,அலுவலகங்கள், ஆர்பிபி கட்டுமான நிறுவனம், அதன் உரிமையாளரின் வீடு உள்ளிட்ட 5 இடங்களிலும் இன்றும் 4வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனைமேற்கொண்டுள்ளனர். இதேபோல் ஈரோடு திண்டல் வித்யா நகரில் எடப்பாடி பழனிச்சாமியின் உறவினரான சிவாஜி அண்ட் கோ உரிமையாளர் சிவகுமார் என்பவர் வீட்டிலும் கடந்த இரண்டு நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனைகளில் ஈடுபட்டு வந்தனர். இந்த சோதனை நேற்று இரவு வரை நடந்து முடிந்தது. இதில் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சோதனையின்போது, பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள், கணக்கில் வராத பணம் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளதாககூறப்படுகிறது.இருப்பினும், சோதனையின் முடிவில்தான் அவை குறித்த முழுமையானதகவல்கள் தெரியவரும்.
Next Story