40 நாட்களாக கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குடிநீர் வழங்கப்படாததால்

ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியல் - ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் திருப்பூண்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில், கடந்த 40 நாட்களாக குடிநீர் முறையாக வழங்கப்படவில்லை‌ என கூறப்படுகிறது. இது தொடர்பாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தும், எந்த விதமான நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் திருப்பூண்டி கிழக்கு கடற்கரை சாலையில் நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூண்டி பகுதி நிலத்தடி நீர் உவர்நீர் என்பதால், கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தை மட்டுமே நம்பி உள்ளனர். கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் அப்பகுதிக்கு முறையாக குடிநீர் வழங்கவில்லை என கூறி பொதுமக்கள் காலி குடங்களுடன் திருப்பூண்டி கிழக்கு கடற்கரை சாலையில், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த, துறை சார்ந்த அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி திருப்பூண்டி பகுதிக்கு இன்னும் சில நாட்களில் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து சாலை மறியல் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Next Story