ரூ.5 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை

ரூ.5 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை
மதுரை திருமங்கலம் ஆட்டு சந்தையில் ஆடுகள் விற்பனை படு ஜோராக நடைபெற்றது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சி ஆட்டுச் சந்தை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் அடுத்த வாரம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால் நேற்று (ஜன.10) நடந்த ஆட்டுச் சந்தையில் அதிகாலை 4:00 மணி முதல் காலை 11:00 மணி வரை ஆடுகள் விற்பனை படு ஜோராக நடந்தது.இதில் ரூ. 15 ஆயிரம் முதல் ரூ. 30 ஆயிரம் வரை ஆடுகள் விற்பனையாகின. சந்தை முடியும் நேரத்தில் மொத்தமாக நேற்று மட்டுமே ரூ. 5 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையாகியதாக தெரிகிறது.
Next Story