50வது தேசிய பெண்கள் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ரூ.30 லட்சம் பரிசுத் தொகையுடன்,25 மாநிலங்களில் இருந்து மொத்தம் 153 வீரர்கள் பங்கேற்பு

50வது தேசிய பெண்கள் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ரூ.30 லட்சம் பரிசுத் தொகையுடன்,25 மாநிலங்களில் இருந்து மொத்தம் 153 வீரர்கள் பங்கேற்பு
செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் 50வது தேசிய பெண்கள் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ரூ.30 லட்சம் பரிசுத் தொகையுடன்,25 மாநிலங்களில் இருந்து மொத்தம் 153 வீரர்கள் பங்கேற்பு
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள மாணகிரியில் செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் சிவகங்கை மாவட்டச் சதுரங்கசங்கம், தமிழக சதுரங்கசங்கம் மற்றும் இந்திய சதுரங்க பேரவையுடன் இணைந்து துவக்கிய இந்த முக்கியமான போட்டி 2024 அக்டோபர் 3 முதல் 13 வரை பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது மொத்தமாக ரூ.30 லட்சம் பரிசுத் தொகையுடன், இந்த போட்டி இந்திய பெண்கள் சதுரங்க வீரர்களுக்கான மிக முக்கியமான நிகழ்வாக நடைபெற்று வருகிறது 2025 பெண்கள் உலகக் கோப்பைக்கான தேர்வு நிகழ்வாக இது நடைபெறுகிறது ஹங்கேரியில் நடைபெற்ற ஒலிம்பியாடில் இந்தியா இரட்டை தங்கப் பதக்கங்களை வென்றுள்ள நிலையில், இப்போட்டிக்கான உற்சாகம் அதிகரித்துள்ளது. 25 மாநிலங்களில் இருந்து மொத்தம் 153 வீரர்கள் 11 நாட்கள், 11 சுற்றுகளாக போட்டி நடைப்பெறுகிறது அண்மையில் ஒலிம்பியாட் பதக்கங்களை வென்ற வீரர்கள் தவிர, முன்னணி வீரர்கள் பங்கேற்க உள்ளனர் மொத்தம் 153 வீரர்கள் பங்கேற்கும் இந்தப் போட்டியில், பத்துப் பரிசுகள் உள்ளன, அதில் முதல் பரிசாக ரூ.7 லட்சம் பரிசுத்தொகையுடன் பிரகாசமான கோப்பையும் வழங்கப்படுகிறது நிகழ்ச்சியை இந்திய சதுரங்க பேரவையின் செயலாளர் திரு தேவ் பட்டேல் அவர்களின் தலைமையில் தொடங்கப்பட்டு தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது இந் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் திரு பி.ஸ்டீபன் பாலசாமி, தமிழ்நாடு சதுரங்க சங்கத்தின் பொதுச் செயலாளர் திரு எஸ்.பி குமரேசன், செட்டிநாடு பப்ளிக் பள்ளியின் தலைவர் திரு கே. அருண், செட்டிநாடு பப்ளிக் பள்ளியின் துணைத் தலைவர் ஆகியோர் கலந்து கொண்டனர்
Next Story