500 க்கும் மேற்பட்ட காவடிகளுடன் முருக பக்தர்கள் சென்னிமலை, சிவன்மலை யாத்திரை துவக்கம்

குமாரபாளையம் அருகே 500 க்கும் மேற்பட்ட காவடிகளுடன் முருக பக்தர்கள் சென்னிமலை, சிவன்மலை யாத்திரை துவங்கினர்.
குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி, கல்லங்காட்டுவலசு, வீரப்பம்பாளையம், நல்லாம்பாளையம், வீ.மேட்டூர், சின்னாயக்காடு உள்பட பல பகுதிகளை சேர்ந்த முருக பக்தர்கள் ஆண்டுதோறும் தைப்பூச நாளில், காவடிகளுடன் சென்னிமலை, சிவன்மலைக்கு பாதயாத்திரை செல்வது வழக்கம் . நேற்று இதே பகுதியை சேர்ந்த முருக பக்தர்கள் 500 க்கும் மேற்பட்ட காவடிகளுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்து, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி, புனித பாதயாத்திரை துவங்கினர். இதில் ஆண்கள், பெண்கள்,. சிறுவர்கள் என பெருமளவில் பங்கேற்றனர். வீ.மேட்டூர் பகுதியில் உள்ள சூரியகிரி மலை முருகன் கோவில் சார்பில் முருக பக்தர்கள் காவேரி ஆற்றில் நீராடி, தீர்த்தக்குடங்களுடன் 35௦ காவடிகளுடன் ஆடியவாறு சூரியகிரி மலைக்கு வந்தனர். அங்கு முருகனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார, ஆராதனைகள் நடந்தன. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன.
Next Story