குடிநீர் குடித்து 51 பேர் உடல் உபாதைகளுடன் மருத்துவமனையில் அனுமதி: மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
சின்ன எலசரியில் மாநகராட்சி சார்பில் குழாயில் விநியோகிக்கப்பட்ட குடிநீர் குடித்து 51 பேர் உடல் உபாதைகளுடன் மருத்துவமனையில் அனுமதி: மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு, புதிய குழாய்களை வேகமாக மாற்றி வரும் மாநகராட்சி ஊழியர்கள்
கிருஷ்ணகிரிமாவட்டம் ஒசூர் மாநகராட்சி, 4வது வார்டிற்குட்பட்ட சின்ன எலசகிரி பகுதியில் நேற்று ஒரே நாளில் வயிற்றுப்போக்கு, மயக்கம்,வாந்தி என 27 பேர் ஒசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மீண்டும் ஜூன் 14ஆம் தேதி காலை 7 மணி முதல்ஒன்றன்பின் ஒன்றாக 24 பேர் ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்,மொத்தம் 51 பேர் அனுமதிக்கப்பட்ட நிலையில் குடிநீரால் பாதிப்பு ஏற்ப்பட்டிருக்கலாம் என கூறப்பட்ட நிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சரயு, ஒசூர் சாராட்சியர் பிரியங்கா, ஒசூர் ஆணையாளர் சிநேகா ஆகியோர் ஒசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை பார்த்து நலம் விசாரித்தனர் அதனைதொடர்ந்து சின்ன எலசகிரி பகுதியில் பாதிப்பிற்குள்ளான பகுதியில் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.. குடிநீரால் பாதிப்பு ஏற்ப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் மாநகராட்சி சார்பில் மருத்துவ முகாம்கள், சுற்றுபுறத்தை தூய்மையாக வைத்து, சுத்தமான நீரை குடிப்பதற்கு வழங்கிட அறிவுறுத்தினார் மேலும் பல ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டிருந்த போர்வெல் குழாய்களால் கூட நச்சுத்தன்மை ஏற்பட்டிருக்கலாம் என கருதி குழாய்கள் முழுவதும் மாற்றி அமைக்கும் பணியைதொடர்ந்து மாநகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது
Next Story