55 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த அரசு உதவி பெறும் பள்ளியை சேர்ந்த மாணவியர்

X
Komarapalayam King 24x7 |25 Jan 2026 10:19 PM IST55 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் மாணவிகள் சந்திப்பு கூட்டம் குமாரபாளையத்தில் நடந்தது.
குமாரபாளையம் விட்டலபுரி பகுதியில் உள்ள, ஜே.கே. ரங்கம்மாள் அரசு உதவி பெறும் பள்ளியில் 1970ல் பயின்ற மாணவிகள், 55 ஆண்டுகள் கழித்து சுமார் 70 பேர் சந்தித்தனர். பள்ளி பருவத்தில் தாங்கள் கல்வி பயின்ற போது நடந்த நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். தங்களுக்கு பாடம் பயிற்றுவித்த ஆசிரியைகள் ஈஸ்வரி, பிரேமலதா, ஆதிரை, நளினி ஆகியோர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தி கவுரவப்படுத்தினர். இதேபோன்று இனிவரும் காலங்களில் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து சந்திப்பதாகவும் கூறி மகிழ்ந்தார்கள்..
Next Story
