6 தொகுதிகளிலும் அதிமுக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி
Thoothukudi King 24x7 |15 Oct 2024 6:31 AM GMT
2026 சட்டமன்றத் தேர்தலில் தூத்துக்குடி மாவட்டத்தில் 6 தொகுதிகளிலும் அதிமுக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசினார்.
தூத்துக்குடி வடக்கு மாவட்டம் எட்டையபுரம் தனியார் திருமண மண்டபத்தில், அதிமுக செயலாளர்கள் ராஜகுமார் மற்றும் அன்புராஜ் ஏற்பாட்டில் அதிமுக செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், தற்போதைய கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு கட்சியினரிடைய சிறப்புரையாற்றினார். அப்போது பேசுகையில் "மீண்டும் 2026 தேர்தலில் தூத்துக்குடி மாவட்டத்தில் 6 தொகுதிகளிலும் அதிமுக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி. பொய் சொல்வதில் திமுகவிற்கு நோபல் பரிசே கொடுக்கலாம், இந்தியாவிலேயே மாணவர்களுக்கு ஆல்பாஸ் (ALL PASS) வழங்கிய முதலமைச்சர் எடப்பாடியார் தான். வருகின்ற காலம் அண்ணா திமுகவிற்கு எழுச்சி காலம், திமுகவிற்கு வீழ்ச்சி காலம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மேலும் திமுக சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த நிறைவேற்றப்படாத தேர்தல் வாக்குறுதிகள், சொத்து வரி, மின்சார கட்டணம் உயர்வு, அத்தியாவசிய பொருள்கள் விலை உயர்வு உள்ளிட்டவைகள் பற்றியும், திமுகவையும், முதல்வர் ஸ்டாலினியும் கடுமையாக விமர்சித்து பேசினார். கூட்டத்தில், எட்டயபுரம் அதிமுக நகர செயலாளர் ராஜகுமார் வாசிக்க கூட்டத்தின் தீர்மானங்களாக அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட நலத்திட்டங்களை மீண்டும் செயல்படுத்திட வேண்டும், எடப்பாடியார் ஆட்சிக் காலத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டதை போல ஏக்கருக்கு ரூ.9 ஆயிரம் இன்சூரன்ஸ் தொகை வழங்க வேண்டும், எட்டயபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளும் படிக்கும் மாணவிகளுக்கு முறையான குடிநீர், கழிப்பிட வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டும் உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில், விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் உள்ளிட்ட விளாத்திகுளம் தொகுதியைச் சேர்ந்த ஏராளமான அதிமுக நிர்வாகிகள் மற்றும் 500க்கும் மேற்பட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.
Next Story