ரூ.6 கோடி 90 லட்சம் மதிப்பில் 17,100 சதுர அடி பரப்பளவில் புதிதாக கட்டப்பட்டு வரும் நூலகத்தை தமிழக முதலமைச்சர் இன்னும் 15 நாட்களில் திறந்து வைப்பார்- செந்தில் பாலாஜி பேட்டி.
Karur King 24x7 |5 Feb 2026 4:22 PM ISTரூபாய் 6 கோடி 90 லட்சம் மதிப்பில் 17,100 சதுர அடி பரப்பளவில் புதிதாக கட்டப்பட்டு வரும் நூலகத்தை தமிழக முதலமைச்சர் இன்னும் 15 நாட்களில் திறந்து வைப்பார்- செந்தில் பாலாஜி கரூரில் பேட்டி.
ரூபாய் 6 கோடி 90 லட்சம் மதிப்பில் 17,100 சதுர அடி பரப்பளவில் புதிதாக கட்டப்பட்டு வரும் நூலகத்தை தமிழக முதலமைச்சர் இன்னும் 15 நாட்களில் திறந்து வைப்பார்- செந்தில் பாலாஜி கரூரில் பேட்டி. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருவள்ளூர் மைதானத்தில் மிகப் பிரமாண்டமாக கட்டப்பட்டு வரும் நூலகத்தை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று நேரில் சென்று பார்வையிட்டார். அவருடன் கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் கணேசன், துணை மேயர் தரணி சரவணன், ஆணையர் சுதா உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கரூரில் நடைபெற்று வரும் நூலக கட்டுமான பணிகளை பார்வையிட்டு பிறகு செய்தியாளர்களை சந்தித்த செந்தில் பாலாஜி, தமிழக மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை தமிழக முதலமைச்சர் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்து வருகிறார். இதன் அடிப்படையில் ரூபாய் ஆறு கோடியே 90 லட்சம் மதிப்பீட்டில் சுமார் 17,100 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டு வரும் இந்த பிரமாண்டமான நூலகத்தின் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு இன்னும் 15 நாட்களில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார் எனவும், இந்த நூலகத்தில் முதல் தளத்தில் வயதில் முதிர்ந்தோர் மாற்றுத்திறனாளிகள் எளிதில் வந்து செய்தித்தாள்களை படித்து செல்வதற்கு அமைக்கப்படும் எனவும், சுமார் 500 மாணவர்கள் போட்டித் தேர்வுக்கு தயாராகும் வகையில் இணையதள வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது எனவும், மாணாக்கர்கள் போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் அவர்களுக்கு முறையான பயிற்சியுடன் அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
Next Story



